மேலும் அறிய

ராதே ஷ்யாம் படத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி...

கன்னட திரையிலகின் 'ரெபெல் ஸ்டார்' என்று அழைக்கப்படும் கிருஷ்ணம் ராஜூ 1940 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி மேற்கு கோதாவரியில் உள்ள மொகல்தூருவில் பிறந்தார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னட திரையிலகின் 'ரெபெல் ஸ்டார்' என்று அழைக்கப்படும் கிருஷ்ணம் ராஜூ 1940 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி மேற்கு கோதாவரியில் உள்ள மொகல்தூருவில் பிறந்தார். இவர் 1966 ஆம் ஆண்டு சிலகா கோரிங்கா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான  ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றார். பல படங்களில் அழகான வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்த அவர் இதுவரை 183 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கிருஷ்ணம் ராஜூ கடைசியாக இந்த ஆண்டு வெளியான பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருந்தார்.

இவர் ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று  நந்தி விருதுகளை வென்ற நிலையில் இவரது சினிமா வரலாற்றில் ஜீவன தரங்களு, கிருஷ்ணவேணி, பக்த கண்ணப்பா , அமர தீபம் , சதி சாவித்திரி , கடகடால ருத்ரையா, மன வூரி பாண்டவுலு, ரங்கூன் ரவுடி, ஸ்ரீ விநாயக விஜயமு, சீதா ராமுலு, டாக்ஸி டிரைவர் , திரிசூலம், தர்மாத்முடு, பொப்பிலி பிரம்மண்ணா, தந்திர பாப்ராயுடு, மரண சாசனம், விஸ்வநாத நாயகுடு, ஆன்டிமா தீர்ப்பு, பாவா பாவமரிதி, பல்நட்டி பௌருஷம் ஆகியவை மிக முக்கிய படங்களாகும். 

1990களின் பிற்பகுதியில் கிருஷ்ணம் ராஜூ அரசியல் களம் கண்டார். அரசியலில் தீவிரமாக இயங்கிய அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து 1998-1999, 1999-2004 என 2 முறை மக்களவை  எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 1999 முதல் 2004 வரை ஆட்சியமைத்த வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சகத்தின் இணை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2009 ஆம் ஆண்டு சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியில் சேர்ந்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் ராஜமுந்திரி தொகுதியில் எம்பி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கோபி கிருஷ்ணா மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களையும் அவர் தயாரித்துள்ளார். 83 வயதான தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த கடந்த சில மாதங்களாகவே  கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில்  இன்று அதிகாலை 3.45 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கிருஷ்ணம் ராஜூவுக்கு  மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இவர் நடிகர் பிரபாஸின் மாமா ஆவார். கிருஷ்ணம் ராஜூ மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன்:
சிவகார்த்திகேயன்: "மதுரை மாப்பிள்ளை என்பதில் பெருமை!" மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த சிவா !
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Embed widget