மேலும் அறிய

Cinema becoming Business : சினிமா வெளியாவதற்கு முன்பே கோடி கணக்கில் லாபம்.. நெட்டிசன்கள் ஆதங்கம்.. என்ன நடந்தது?

படம் வெளியாவதற்கு முன்னரே கோடி கணக்கில் விற்பனையாகும் முன்னணி ஹீரோக்களின் பட உரிமைகளை பார்க்கையில் சினிமா பொழுதுபோக்கு அம்சம் என்பதை மறந்து ஒரு பிசினஸாக மாறி வருகிறது என்ற கவலை எழுந்துள்ளது

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி இணைந்துள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா பல ஆண்டுகளுக்கு பிறகு  இணைகிறார். காஷ்மீரில் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கைதி, விக்ரம் திரைப்படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படத்தில் லியோ படமும் இணையுள்ளதாக கூறப்படுவதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. லியோ படத்தின் உரிமை 400 கோடிக்கு விற்பனையாகி உள்ளது என்ற தகவல் வெளியானது.

Cinema becoming Business : சினிமா வெளியாவதற்கு முன்பே கோடி கணக்கில் லாபம்.. நெட்டிசன்கள் ஆதங்கம்.. என்ன நடந்தது?


லியோவை முறியடித்த சூர்யா 42 :  

அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் வரலாற்று திரைப்படம் தற்காலிகமான சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ளது. சூர்யாவின் ஜோடிகளாக பாலிவுட் நடிகைகள் மிருணாள் தாகூர் மற்றும் திஷா பதானி தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்கள். இப்படம் குறித்த அப்டேட் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை என்றாலும் சைலண்டாக படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது என்ற தகவல் மட்டும் வெளியானதை அடுத்து தற்போது சூர்யா 42 திரைப்படத்தின் உரிமை 500 கோடிக்கு விற்பனையாகி உள்ளது என கூறப்படுகிறது. இதன் மூலம் சூர்யா ரசிகர்கள் விஜயின் லியோ படத்தை முந்தியதை கொண்டாடி வருகிறார்கள். 

ரிலீசுக்கு முன்பே கோடியில் வியாபாரம்: 

இந்த இரு படங்களின் உரிமையும் இத்தனை கோடிக்கு விற்பனையாகி உள்ளது அதுவும் படம் வெளியாவதற்கு முன்னரே என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்கள் மட்டுமின்றி சமீபகாலமாக வெளியாகும் பல திரைப்படங்களும் வியாபார ரீதியில் மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் சினிமா என்டர்டெயின்மென்ட் என்பதையும் தாண்டி ஒரு மிக பெரிய பிசினஸாக மாறி வருகிறது என்பதை பார்க்க முடிகிறது. முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களை அவர்களின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக இருக்கின்றன.

பெரும்பாலானவை மிகவும் சுமாரான படங்களாகவே இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி சினிமா வெறும் பணம் குவிக்கும் பிசினஸாக மாறியுள்ளது. அதனால் சினிமா ஒரு என்டர்டெயின்மென்ட் ஃபேக்டர் என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போகிறது. இதனால் சினிமா சரியான பாதையில் தான் பயணித்து வருகிறதா என ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget