Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் கார்த்திகை தீபம். தினமும் எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. நேற்றைய எபிசோடில் ரேவதி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், இன்று கதைக்களம் மேலும் சூடுபிடிக்கிறது.
ஷாக்கில் ரேவதி:
அதாவது, கார்த்திக் மற்றும் ரேவதி சந்தித்துக் கொள்வதால் இருவரும் மகிழ்ச்சியடைகின்றனர். தொடர்ந்து, சாமுண்டீஸ்வரி தீட்டியுள்ள திட்டங்கள் குறித்து கார்த்திக் ரேவதியிடம் விவரமாக எடுத்துக் கூற, பல உண்மைகள் தெரிந்து ரேவதி அதிர்ச்சியடைகிறாள்.
மறுபக்கம், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவல் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய முத்துவேலை போலீசார் கைது செய்கின்றனர். "நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினாலும், போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றனர்.
கேள்வி கேட்ட ரேவதி:
இதையடுத்து வீட்டிற்கு வரும் ரேவதியை பார்த்த சாமுண்டீஸ்வரி, "நீ கனடா செல்லாமல் ஏன் திரும்பி வந்தாய்?" என்று கேட்கிறாள். அதற்கு அதிரடியாக பதிலளிக்கும் ரேவதி, "இதெல்லாம் உங்கள் திட்டம் என்பது எனக்கு தெரிந்துவிட்டது. கார்த்திக் தான் என்னுடைய கணவர் என்ற உண்மையை ஏன் மறைத்தீர்கள்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி சாமுண்டீஸ்வரியை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறாள்.
அடுத்து நடக்கப்போவது என்ன?
ரேவதியின் இந்த நேரடி மோதலுக்கு சாமுண்டீஸ்வரி என்ன பதில் சொல்லப் போகிறாள்? இதுவரை மறைத்து வைக்கப்பட்ட ரகசியங்கள் அனைத்தும் வெளிவருமா? அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















