Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
விஸ்வநாத் அன் சன்ஸ் 20 வயது இடைவெளியில் நடக்கும் மனப்போராட்டம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் சுதந்திர தின கொண்டாட்டமாக விஸ்வநாத் அன் சன்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக படக்குழுவினர் சிறப்பு பேட்டி அளித்தனர். தற்போது நடிகர் சூர்யா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
லக்கி பாஸ்கர் பிடித்திருந்தது:
வெங்கி அட்லுரியின் லக்கி பாஸ்கர் மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் சுயசரிதை படம்தான் எடுக்கலாம் என்று இருந்தோம். ஆனால், பல காரணங்களால் அது நடக்கவில்லை. எல்லாரும் ஒரு விஷயம் பண்றாங்க. நாம வேற ஒன்னு பண்ணலாம்னு வெங்கி இந்த கதையை கொண்டு வந்தாரு.
அவரோட எழுத்து எல்லாத்தையும் இன்னும் அழகாக்கியது. எல்லா கேரக்டரையும், எல்லா மொமண்டையும் அழகாக்கியது. வேறு வேறு வயது வித்தியாசத்தில் வாழக்கூடியவர்களின் வாழ்க்கையை அழகாக எடுத்துக்காட்டும் வகையில் திரைக்கதை உள்ள படம் எனக்கு சட்டென்று தெரியவில்லை.
20 வயது வித்தியாசம்:
பாலச்சந்தர், பாரதிராஜா படங்கள் வந்துருக்கு. ஆனால், பெரிய இடைவெளி உள்ளது. நான் ஒரு ஆணாக இ்ப்பவும் சொல்வேன், ஒரு பெண்ணோட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதே சிரமம் வெங்கி அட்லுரி சொல்வார். பக்கத்திலே இருக்கலாம், பார்க்கலாம், ஆனால் அனைத்தையும் எடுத்துக்கொண்டாேமா? என்றால் இல்லை.
சமரசம் மட்டுமின்றி அதை முதிர்ச்சியாக கையாளுதல், வழிகாட்டுதல் என்று பல விஷயங்கள் உள்ளது. வெங்கி அட்லுரி அனைத்தையும் ஆய்வு செய்து எடுத்துள்ளார். நாம் அனைவருக்கும் தெரியும் இது வயது வித்தியாச படம். 20 வயது இடைவெளியில் நடக்கும் மனப்போராட்டம்தான் இந்த படம். ராதிகா - மமைதா பைஜு கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும்.
படம் பார்த்த முக்கியமான ஒருத்தர் சொன்னார். எனக்கு இந்த வீட்டில் இவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
குடும்ப கதை:
நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் மமைதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் - ஃபார்ச்சுன் ஃபோர் சினிமாஸ் , ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளனர்.
சுமார் 20 வருட வயது வித்தியாசம் கொண்ட ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான காதல் கதையே இந்த படம் ஆகும். முழுக்க முழுக்க குடும்ப படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















