மேலும் அறிய

Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

தமிழ்நாட்டில் 2031ல் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று நடிகர் விஷால் பேசியுள்ளார்.

நடிகர் விஷால் சமீபத்தில்  அவரது மகுடம் திரைப்படத்திற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது, 

பகை வராது:

உதயா மற்றும் கிருத்திகா மீது எனது அன்பு எப்போதும் இருக்கும். கிருத்திகாவை உதயா காதலித்துக்கொண்டிருந்தபோது நாங்கள் டான் போஸ்கோ பசங்க எல்லாரும் நின்று கொண்டிருந்தோம். எனக்கு உதயாவிற்கும் பகை வருவதற்கு வாய்ப்பே கிடையாது. 

நாளை அரசியலுக்கு வந்தால் கூட அன்பான பகையாக இருக்கலாம். மற்றபடி பகை எல்லாம் உதயாவுடன் வரவே வராது. செண்பகமூர்த்தியே தப்பா நினைக்கலாம். ஆனால், உண்மையை சொல்றேன். உதயநிதி ரொம்ப நல்ல மனிதர்.

மிஸ்:

உதயநிதியும், நானும் கோபாலபுரத்துல ட்ரிப்ள்ஸ் போறப்ப போலீஸ் கான்ஸ்டபிள் பிடிச்சாங்க. லைசன்ஸ் கேட்டாங்க. அப்பா பேரு சொல்லுடா, அப்பா பேரு சொல்லுடானு சொல்லுவோம். அவன் சொல்ல மாட்டேன்னு சொல்லுவான். டேய் சொல்லுடானு சொல்லுவோம். அவன் சொல்லவே மாட்டான். அவன் அவங்க அப்பா பெயரை சொல்லவே மாட்டான். மிகச்சிறந்த நண்பர். 

நான், உதயா, மகேஸ், வெங்கட், பிரவீன் எல்லாரும் ஒரு கேங் அப்போது முதலே. நாங்கள் அந்த நாட்களை மிகவும் மிஸ் செய்கிறோம்.

2031ல் மாற்றம் எதிர்பார்க்கலாம்:

2031ல் மாற்றம் எதிர்பார்க்கலாம்னு சொல்லலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். என்னுடைய கடைசி வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். எனக்கு திருமணம் ஆக வேண்டும். என் திரை வாழ்வில் ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பார்த்துகிட்டு இருக்காங்க. வர வேண்டிய நேரத்தில் வரலாம். நான் ஆர்கே நகரில் முயற்சித்தேன். கடவுள் உனக்கு இப்போ நேரம் இல்லையென்று அனுப்பிவிட்டார். 

இவ்வாறு அவர் பேசினார்.

விஷால் நீண்ட நாட்களாக அரசியலில் வர ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார். ஆர்கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட அவர் முனைப்பு காட்டினார். ஆனால், அதில் அவரால் போட்டியிட இயலவில்லை. 

மகுடம் படத்தை தொடக்கத்தில் ரவி அரசு இயக்கியிருந்தார். பின்னர், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பின்னர் இந்த படத்தை அவரே இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயபிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டமாக வரும் ஆகஸ்ட் 14ம் தேதி இந்த படம் வெளியாகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Embed widget