Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ‘கார்த்திகை தீபம்’. நேற்று முன்தினம் எபிசோட்நிலையில், இன்று ஒளிபரப்பாகு பரபரப்புடன் முடிந்த நிலையில், இன்றைய எபிசோடில் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேற உள்ளன.
விமானத்தில் ஏறிய ரேவதி:
ரேவதி வெளிநாடு செல்லும் முடிவில் உறுதியாக இருக்க, அவளை சந்திக்க கார்த்திக் அவசரமாக ஏர்போர்ட்டை நோக்கி விரைந்து வருகிறான். ஆனால் நேரம் கடந்துவிட்டதால் ரேவதி போர்டிங் முடித்து விமானத்திற்குள் சென்று விடுகிறாள். இதைப் பார்த்த சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
அந்த நேரத்தில் ஏர்போர்ட்டை அடையும் கார்த்திக்கை பார்த்த சாமுண்டீஸ்வரி, “இனி ரேவதி இந்தியாவுக்கு திரும்பவே மாட்டாள்” என கிண்டலாக சவால் விடுகிறாள். ஆனால் கார்த்திக்கின் முகத்தில் பதற்றம் இருந்தாலும், மனதில் ஓடிக்கொண்டிருப்பது ஒரு ரகசிய திட்டம்.
வெடிகுண்டு மிரட்டல்:
விமானத்தில் அமர்ந்திருக்கும் ரேவதி, கடைசி முறையாக கார்த்திக்குப் போன் செய்ய முயற்சிக்கிறாள். ஆனால் விமானம் புறப்பட உள்ளதால் மொபைலை அணைக்குமாறு விமான பணியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். இதே நேரத்தில் கார்த்திக், மயில்வாகனத்திற்கு ஒரு முக்கியமான தகவலை தெரிவித்து வேலையை தொடங்கச் சொல்கிறான்.
உடனே கிளம்பும் மயில்வாகனம் சிவனாண்டி வீட்டிற்கு செல்கிறான். ஆனால் அங்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் முத்துவேல் போனை எடுத்த மயில்வாகனம் யாருக்கும் தெரியாமல் ஏர்போர்ட்டிற்கு போன் செய்து, ரேவதி பயணிக்கும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவலை தெரிவிக்கிறான்.
மீண்டும் வந்த ரேவதி:
இந்த தகவல் விமான நிலைய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. எந்த அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதற்காக ஏற்கனவே புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கப்படுகிறது. இதனால் ரேவதி மீண்டும் வெளியே வருகிறாள். வெளியே வந்த ரேவதியை கண்ட கார்த்திக் நிம்மதி பெருமூச்சு விட, இருவரும் உணர்ச்சிபூர்வமாக சந்தித்துக் கொள்கின்றனர். கார்த்திக்கின் இந்த மாஸ்டர் மூவ் சாமுண்டீஸ்வரியின் சவாலுக்கு பதிலடியாக அமையுமா?
அதிரடி, பரபரப்பு, உணர்ச்சி என அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கார்த்திகை தீபம்’ எபிசோடை தவறாமல் காணுங்கள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















