Tiruchitrambalam: ‛உங்க ஆர்டர் ரெடி...’ என்ன சொல்ல வருகிறது திருச்சிற்றம்பலம் போஸ்டர்?
Tiruchitrambalam update: திருச்சிற்றம்பலம் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில் " உங்களின் ஆர்டர் தயாராகிறது விரைவில் டெலிவரி செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
New Poster update: புதிய போஸ்டரால் குழம்பிப்போன ரசிகர்கள் - வைரலாகும் "திருச்சிற்றம்பலம்" புதிய போஸ்டர்
தனுஷ் நடிப்பில் வெளியான "யாரடி நீ மோகினி", "உத்தம புத்திரன்", "குட்டி" உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாடல்கள் சூப்பர் ஹிட் :
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் சில தொழிநுட்ப வேலைகள் மட்டும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷ் தாய் கிழவி,மேகம் கருக்காதா பெண்ணே, தேன்மொழி ஆகிய 3 பாடல்களை எழுதியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தான் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரோடு இயக்குநர்கள் வெற்றிமாறன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். படத்தின் ட்ரைலர் காட்சிகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
I am actually quite excited for #Thiruchitrambalam
— Avinash Ramachandran (@TheHatmanTweets) August 3, 2022
Post the #MeghamKarukatha song, the film has been radiating overwhelmingly positive vibes!
It also has some of my favourite people in cinema, and release date nerunga nerunga, I am just elated! #Dhanush pic.twitter.com/DtLx4Y7fc7
குழம்பிய ரசிகர்கள்:
திருச்சிற்றம்பலம் படக்குழுவினர் தற்போது ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் " உங்களின் ஆர்டர் தயாராகிறது விரைவில் டெலிவரி செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது திரை ரசிகர்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் குறித்த அப்டேட் புரியாமல் ரசிகர்கள் தவிர்ப்பதால் சமூக வலைத்தளங்களில் இது அதிக அளவு கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இப்படம் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Your order is getting ready 🛵 Delivering soon🤩@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas pic.twitter.com/3z6JS0bXKC
— Sun Pictures (@sunpictures) August 5, 2022