Thiruchitrambalam OTT: திருச்சிற்றம்பலம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம், ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
திருச்சிற்றம்பலம் திரைப்படம்:
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். படத்தை, பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் உருவாகியிருந்தது. முக்கிய கதாப்பாத்திரங்களாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், இயக்குனர் பாரதி ராஜா ஆகியோர் நடித்திருந்தனர். நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். ரிலீஸான மூன்று வாரங்களிலேயே பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் களைகட்டியது திருச்சிற்றம்பலம். தனுஷ் படங்களிலேயே இந்த அளவிற்கு கலெக்ஷன் வந்ததில்லை என்ற பேச்சு அடிப்பட்டது. கலவையான விமர்சனங்கள் ஆயிரம் இடம் பெற்றிருந்தாலும், குடும்பப்படமாக இருந்ததால், படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. படத்தில் இடம் பெற்றிருந்த மேகம் கருக்காதா பாடலும், தேன் மொழி பாடலும், இன்ஸ்டாகிராமில் பெரும்பாலானோரால் ரீல்ஸ் செய்யப்பட்டு, ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதையடுத்து, வெளியிடப்பட்ட “மயக்கமா..” பாடலும், பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தனுஷ்-சன் பிக்சர்ஸ்:
நடிகர் தனுஷ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து 4-வது முறையாக திருச்சிற்றம்பலம் படத்தில் மீண்டும் சன் பிக்சர்ஸ்சுடன் கைக்கோர்த்தார் தனுஷ். இவர்களுடைய ராசி நன்றாக வர்க்-அவுட் ஆக, இந்த படமும் ரசிகர்களின் ஆதரவுடன் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை படைத்தது.
ஓடிடி ரிலீஸ்:
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிருவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், வரும் 23-ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் படத்தை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
தனுஷின் அடுத்த படம்:
திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு, தனுஷின் நானே வருவேன் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் தனுஷ், ஹீரோ-வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக யோகி பாபு, இந்துஜா ரவிசந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். மாபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்தினத்தில் இந்த படம் ரிலீஸாகவுள்ளது. இதனால், இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடி வருகிறது.