‛குவாட்டர் தான் பிரச்சனை....’ விஜயகாந்த் - வடிவேலு சண்டைக்கான உண்மை காரணத்தை உடைத்த ‛சாரப்பாம்பு’ சுப்புராஜ்!
“வடிவேலுவ மீண்டும் நடிக்க சொல்லுடா..அவன் இல்லாம போர் அடிக்குது நடிக்கவே “ என்றார் விஜயகாந்த்

கடந்த 2007 ஆம் ஆண்டு விஜய்காந்திற்கும் நடிகர் வடிவேலுவிற்கும் சண்டை ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதாவது விஜயகாந்தின் தங்கை திருமலாவின் கணவர் முத்துராமன் கடந்த 2007 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.இவர்கள் இருந்த அடுத்த தெருவில்தான் நடிகர் வடிவேலுவின் அலுவலகமும் இருந்திருக்கிறது. அப்போது மதுரையில் இருந்து வந்த விஜயகாந்தின் உறவினர்கள் , வாகனத்தை வடிவேலு அலுவலகம் எதிரே பார்க் செய்திருந்தாதகவும், குடிபோதையில் இருந்த வடிவேலு அதனை கண்டு சத்தம் போட்டு திட்டியதாகவும். உடனே அங்கிருந்த விஜய்காந்த் ரசிகர்கள் , மேனேஜர் , வாட்ச்மேன் உள்ளிட்டவர்கள் வடிவேலுவின் அலுவலகத்தை தாக்கி ,வடிவேலுவின் காரை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதன் பிறகு விஜயகாந்தை பல மேடைகளில் மிகவும் மோசமான முறையில் வடிவேலு இமிட்டேட் செய்து அவரது ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றார்.சில காலங்களுக்கு பிறகு மன்னிப்பும் கேட்டார்.

உண்மையில் அன்று என்னதான் நடந்தது என பிரபல காமெடியனும் , விஜயகாந்த் மற்றும் வடிவேலுவிற்கு நெருக்கமானவருமான சுப்புராஜ் தற்போது ஓபன் அப் செய்திருக்கிறார். அதாவது வடிவேலு தனது பிறந்த நாளை முன்னிட்டு , தனது நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தாராம் . பிரசாத் லேபில் இந்திர லோகத்தில் நா அழகப்பன் படப்பிடிப்பு முடிந்ததும் நடைப்பெற்ற பிறந்தநாள் பார்ட்டியில் மது விருந்து கொடுத்திருக்கிறார் வடிவேலு. உண்மையில் வடிவேலு ‘ 5 பைசா கூட செலவு பண்ண மாட்டான்..தண்ணி கூட வாங்கி கொடுக்கமாட்டான் ‘ என்கிறார் சுப்புராஜ். ஆனால் அன்று அனைவருக்கும் குவாட்டர் வாங்கி கொடுத்தாராம். இது சுப்புராஜுக்கு அதிர்ச்சியாக இருந்ததால் , ஏதோ நடக்க போகுது , நீ செலவெல்லாம் பண்ணுறியே என நகைச்சுவையாக கூறியிருக்கிறார் சுப்புராஜ் .

உடனே இருவரும் வடிவேலுவின் அலுவலகம் நோக்கி சென்றிருக்கின்றனர்.அப்போது வடிவேலு அலுவலகம் முன்பு கார் இருக்கவே , அவர் யாருடைய கார் இது என கேட்க, உடனே விஜய்காந்த் வீட்டு காவலாளி ராதா என்பவர் , வடிவேலுவிடம் விஜயகாந்தின் தங்கை கணவர் இறந்த விவரத்தை கூறியிருக்கிறார். மது போதையில் இருந்ததால் வடிவேலுவும் , சுப்புராஜும் அடுத்த நாள் மாலை வாங்கிக்கொண்டு அஞ்சலி செலுத்த செல்லலாம் என முடிவெடுத்திருக்கின்றனர். இருவரும் வீடு சென்ற பிறகு நடந்த சம்பவத்தை அறிந்த அங்கிருந்த விஜயகாந்த் ரசிகர்கள் , நமது அண்ணன் படத்தில் நடிக்க முடியாது என கூறியவர் , எப்படி இப்படியெல்லாம் கேட்கலாம் என கோவப்பட்டு , அவரது அலுவலகத்தை அடித்தி நொறுக்கியுள்ளனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தாராம் வடிவேலு, பிரச்சனை தீவிரமாகவே அடுத்த நாள் டிவியை பார்த்துதான் தெரிந்துக்கொண்டாராம் சுப்புராஜ். வடிவேலுவிற்கும் விஜயகாந்திற்கு எந்த பிரச்சனையும் கிடையாது. இதுதான் நடந்தது. என்னும் சுப்புராஜ் , சில காலங்களுக்கு பிறகு விஜயகாந்த் தன்னை அழைத்து “வடிவேலுவ மீண்டும் நடிக்க சொல்லுடா..அவன் இல்லாம போர் அடிக்குது நடிக்கவே “ என்றாராம். நடந்ததை எல்லாம் மறந்து , இயல்பாக நடந்துக்கொண்ட விஜயகாந்த்தை நினைத்து மேன் மக்கள்..மேன்மக்களே என நெகிழ்ந்து போகிறார் சுப்புராஜ்





















