The Marvels : 'தி மார்வெல்ஸ்' ட்ரெய்லருக்கு மவுசு குறைந்ததா? இதுதான் காரணமா?
மார்வெல் படத்திற்கு முன்னர் இருந்த எதிர்பார்ப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான 'தி மார்வெல்ஸ்' டிரெய்லர் பெரிய அளவில் வரவேற்பு பெறாததற்கு காரணம் என்ன?
ஹாட்ஸ்டாரில் வெளியாகும் Ms Marvel தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2019-ஆம் ஆண்டு வெளியான 'கேப்டன் மார்வெல்' படத்தில் அமர்க்களமாக நடித்திருந்தார் இமான் வெல்லனி, அவர் ஏற்று நடித்த கமாலா கதாபாத்திரத்தை வெகு சிறப்பாக நடித்திருந்தார். கடைசியாக வெளியான எபிசோடில் அடுத்து வரவிருக்கும் படத்திற்கான டீசருடன் முடித்தார்கள். அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக 'தி மார்வெல்ஸ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மூன்று பெண்கள் முக்கிய கதாபாத்திரங்களில் சூப்பர் ஹீரோக்களாக நடித்துள்ளனர். இப்படம் வெற்றி பெற வேண்டும் என்பது MCU ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தாலும் சில எதிர்மறையான விமர்சனங்களும் எழுகின்றன என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் மாதம் ரிலீஸ் :
மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக MCU யுனிவர்ஸில் அடுத்து வெளியாகவிருக்கும் 'தி மார்வெல்ஸ்' படத்தை நியா டகோஸ்டா இயக்க அதில் ப்ரி லார்சன், டெயோனா பாரிஸ்,சாமுவேல் எல். ஜாக்சன், இமான் வெல்லானி, ஜாவே ஆஷ்டன் மற்றும் பார்க் சியோ-ஜூன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்தில் ப்ரி லார்சன் நடிக்கிறார். ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
குறையும் வரவேற்பு:
முன்னர் மார்வெல் படத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கும் ஆனால் சமீப காலமாக அவை எதிர்ப்பதமாக மாறி வருவதாக தெரிகிறது.அந்த வகையில் சமீபத்தில் வெளியான 'தி மார்வெல்ஸ்' டிரைலர் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. MCU-இன் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்களை மையமாக கொண்டே இருந்தன. ஆனால் தற்போது அவை பெண்களை மையாக கொண்டு வெளியாகி வருவதால் வரவேற்பு சற்று குறைந்து வருகிறது. இது குறித்து MCU தீவிர ரசிகர்கள் பலதரப்பட்ட கலவையான விமர்சனங்களை இணையத்தில் முன்வைத்து வருகிறார்கள். அவர்களின் கமெண்ட் மூலம் MCU தீவிர ரசிகர்கள் பெண்கள் தலைமையிலான மார்வெல் படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறுமா இல்லையா என்பதில் சந்தேகம் எழுந்து வருகிறது.