Prithviraj : அப்பா பேர வச்சுதான் நடிக்க வந்தேன்.. என்ன பண்ண முடியும்.. வெளிப்படையாக பேசிய பிருத்விராஜ்
Prithviraj : தனது அப்பாவின் அடையாளத்தை பயன்படுத்திதான் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக நடிகர் பிருத்விராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்
![Prithviraj : அப்பா பேர வச்சுதான் நடிக்க வந்தேன்.. என்ன பண்ண முடியும்.. வெளிப்படையாக பேசிய பிருத்விராஜ் the goat life actor prithviraj actor opens up about getting into acting using his fathers name Prithviraj : அப்பா பேர வச்சுதான் நடிக்க வந்தேன்.. என்ன பண்ண முடியும்.. வெளிப்படையாக பேசிய பிருத்விராஜ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/27/6930edb3677ecd02a731a63ca472be8a1711509308298572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தனது அப்பா நடிகராக இருந்ததால் சினிமாவில் தனக்கு ஈஸியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டதாக நடிகர் பிருத்விராஜ் கூறியுள்ளார்.
ஆடு ஜீவிதம்
1970களில் பிரபல மலையாள நடிகராக இருந்த சுகுமாரன். சுகுமாரனின் மகனான நடிகர் பிருத்விராஜ் கடந்த 2002-ஆம் ஆண்டு நந்தனம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழ் , இந்தி , மலையாளம் , கன்னடம் என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு தேசிய விருது, மூன்று கேரள மாநில விருது , ஒரு தமிழ் மாநில விருது மற்றும் பல்வேறு ஃபிலிம்ஃபேர் விருதுகளை பிருத்விராஜ் வென்றுள்ளார். நடிகர் பிருத்விராஜ் தற்போது நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மலையாள இயக்குநர் ப்ளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசைமைத்துள்ளார். நஜீப் முகமத் என்பரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப் பட்டுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் முழுமூச்சாக நடைபெற்று வருகின்றன. இதில் நடிகர் பிருத்விராஜ் தான் சினிமாவில் நடிக்க வந்ததைக் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அப்பா பெயர் வைத்து தான் நடிக்க வந்தேன்
சினிமாவிற்கு நடிக்க வர எந்த மாதிரியான சவால்களை கடந்து வந்தார் என்கிற கேள்விக்கு பதிலளித்த பிருத்விராஜ் “நான் எந்த வித கஷ்டமும் இல்லாமல் தான் சினிமாவில் நடிக்க வந்தேன். என்னுடைய அப்பா நடிகராக இருந்த காரணத்தினால் தான் எனக்கு முதல் படம் கிடைத்தது. இவ்வளவு பெரிய நடிகரின் பையன் பார்க்கவும் கொஞ்சம் நன்றாக இருக்கிறார் என்றுதான் எனக்கு முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். நிச்சயமாக என்னைவிட திறமையான எத்தனையோ நபர்கள் இந்த வாய்ப்பிற்கு தகுதியானவர்கள் இருப்பார்கள். ஆனால் என்னுடைய அப்பவின் பெயரால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
Respect @PrithviOfficial ❤️👏🏼 pic.twitter.com/Rnli9fFA5k
— Ayyappan (@Ayyappan_1504) March 25, 2024
என்னுடைய முதல் படம் மட்டும்தான் எனக்கு என் அப்பாவின் பெயரால் கிடைத்தது. அதற்கடுத்து நான் நடித்த படங்கள் எல்லாமே என்னுடைய உழைப்பினால் தான். நான் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் நான் என் அப்பாவின் பெயரை பயன்படுத்தி தான் நடிக்க வந்தேன். அதை என்ன செய்தாலும் மாற்ற முடியாது” என்று பிருத்விராஜ் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : Fahadh Faasil Dance: கல்லூரி மாணவர்களுடன் ஆட்டம் போட்ட பகத் ஃபாசில்.. இணையத்தில் கலக்கும் வீடியோ பதிவு..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)