மேலும் அறிய

Vijays The GOAT: தளபதி விஜய்ன்னா சும்மாவா..! தி கோட் படத்தின் முன்பதிவில் புதிய சாதனை, ஓரம்போன இந்தியன் 2

Vijays The GOAT Booking: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படத்தின் டிக்கெட் முன்பதிவில், சாதனை நிழந்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijays The GOAT Booking: கமலின் இந்தியன் 2 படத்திற்கான டிக்கெட் முன்பத்வு சாதனையை, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படம் முறியடித்துள்ளது.

”தி கோட்” - டிக்கெட் முன்பதிவு தீவிரம்:

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கோட்”. ஏஜிஎஸ் நிறுவனத்தால் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், பெரும் எதிர்பர்ப்புகளுடன் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, தி கோட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்வது மட்டுமின்றி, திரையரங்க வளாகங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெடுகளை பெற்றுச் செல்கின்றனர். படம் வெளியாக சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஏற்கனவே முன்பதிவு மூலமே இப்படம் பல சாதனைகளை படைக்க தொடங்கியுள்ளது.

இந்தியன் - 2 சாதனை முறியடிப்பு: 

அதன்படி, தி கோட் திரைப்படம் இந்தியன் 2' படத்தின் விற்பனைக்கு முந்தைய வியாபாரத்தை முறியடித்து. இந்த ஆண்டு தமிழ்ப் படத்திற்கான மிகப்பெரிய முன்பதிவை பெற்ற படமாகவும் உருவெடுத்துள்ளது. கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2  திரைப்படம் அதன் முன்பதிவு மூலம் ரூ. 11.20 கோடி மொத்த வணிகத்தைப் பதிவுசெய்தது. ஆனால், தி கோட் திரைப்படம் அதைவிட மிகப்பெரும் முன்பதிவை பெற்று வருகிறது. 

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, இப்படம் அதன் முதல் நாளுக்கு ஆறு லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்று, முன் விற்பனையில் ரூ.12.82 கோடியை வசூலித்ததாக வர்த்தக இணையதளம் Sacnilk தெரிவித்துள்ளது. பிளாக் செய்யப்பட்ட இருக்கைகள் மூலம் பெற்ற வணிகம் தரவுகளில் இல்லை. பிளாக் செய்யப்பட்ட இருக்கைகள் உட்பட இதுவரை முன்பதிவு செய்ததில் இருந்து மொத்த தொடக்க நாள் வசூல் சுமார் ரூ.16.25 கோடி இருக்கும் என கணிக்கப்படுகிறது. இன்னும் ஒரு நாள் மீதமுள்ள நிலையில், முன்பதிவு மூலமான பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூல் ரூ.20 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாள் வசூல் எதிர்பார்ப்பு:

 படத்தின் ஒட்டுமொத்த முதல் நாள் வசூல் 30-40 கோடி ரூபாய் வரம்பில் இருக்கும், இது ஒரு அசாதாரண சாதனையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கிய 'GOAT' திரைப்படம், 25.6 கோடி ரூபாய் என்ற 'இந்தியன் 2' படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் ஓப்பனர் படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 'இந்தியன் 2' படத்தின் மொத்த வசூலையும் தாண்டி, இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக உருவெடுக்கும் எனவும் நம்பப்படுகிறது. இந்தியன் 2 உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் மொத்தமாக 81.32 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. எனவே, இதனை தி கோட் திரைப்படம்  எளிதில் கடந்து,  ​​முதல் வார இறுதியிலேயே இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக வெளியான விஜயின் தி கோட் திரைப்படம், ஒட்டுமொத்தமாக ரூ.341 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget