Beast Trailer Out: ”நான் அரசியல்வாதி இல்ல.. படைவீரன்” : மிரட்டும் விஜய்.. தெறிக்கவிட்ட பீஸ்ட் ட்ரெயிலர்..
ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.
தொடர்ந்து ஆடியோ லான்ச் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, ட்ரெய்லர் அப்டேட் கிடைத்தது.
View this post on Instagram
அதன்படி இன்று மாலை 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில்,காலையில் இருந்து ட்ரெய்லர் வெளியீட்டுக்கான ப்ரோமோஷன் சமூகவலைதளங்களில் ஹிட் அடித்து கொண்டிருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.