Seetha Raman: வசமாக சிக்கிய கல்பனா.. நான்சியை துரத்தும் சீதா - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா கோர்ட்டுக்கு வரமாட்டான் என கணக்கு போட்டு அவளது பெயிலை கேன்சல் செய்ய நான்சி பிளான் போட்ட நிலையில் கடைசியாக சீதா அங்கு வந்தாள்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் வந்திருப்பது அர்ச்சனா இல்லை கல்பனா என்று ஆதாரத்துடன் நிரூபிக்க நான்சி அதிர்ச்சி அடைகிறாள். அதன் பிறகு ராம் வெளியே வந்ததும் நீ எப்படி அது கல்பனா கண்டுபிடித்த என்று கேட்கிறான். அவங்க வெளிய நின்னு தம்மடிச்சிட்டு இருக்கறத நான் பார்த்தேன். அர்ச்சனா தம்மடிக்க மாட்டாங்க, கல்பனா தான் தம் அடிப்பாங்க. இந்த முறையும் எனக்கு முத்தாரம்மன் தான் உதவி பண்ணா என்று சொல்கிறாள்.
இதையடுத்து இவர்கள் வீட்டுக்கு வர சுபாஷ் அர்ச்சனா எங்கன்னு தெரியலையே என்று பதறுகிறார். வீட்டில் உள்ள எல்லோருக்கும் இது நான்சியோட வேலை தான் என்று சந்தேகம் வருகிறது. மறுபக்கம் வீட்டுக்கு வரும் நான்சி அர்ச்சனாவை ரிலீஸ் செய்ய சொல்கிறாள். வீட்டுக்கும் வரும் அர்ச்சனா எல்லாத்துக்கும் காரணம் கல்பனா தான் என்று சொல்கிறாள். எல்லோரும் திரும்பத் திரும்ப கேட்டாலும் நான்சி பெயரை மட்டும் சொல்லாமல் இருக்கிறாள். இருந்தாலும் எல்லோருக்கும் நான்சி மீது சந்தேகம் இருக்க இனி அவங்க இந்த வீட்ல இருக்க கூடாது என முடிவு எடுக்கின்றனர்.
கடைசியாக நான்சி வீட்டுக்கு வர அவரிடம் இனிமே நீங்க இங்க இருக்க கூடாது நீங்க இங்கே இருக்கிறது இங்கே யாருக்கும் பிடிக்கல இங்கிருந்து போயிடுங்க என்று சொல்ல நான்சி நாளைக்கு கிளம்பிட்டேன் என்று கூறுகிறாள். சேது பிளைட் டிக்கெட் போட சொல்ல நான்சி ஏற்கனவே ரிட்டன் டிக்கெட் போட்டு தான் வந்து இருக்கேன் என்று சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
View this post on Instagram