Naladamayanthi:இன்வெஸ்ட்டரை கடுப்பாக்கிய தமயந்தி.. நளனுக்கு வந்த ஆப்பு - அதிரடி திருப்பங்களுடன் நளதமயந்தி சீரியல்
நளதமயந்தி சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நளதமயந்தி. இந்த சீரியலில் கடந்த வாரம் நளன் தேடும் அன்னபூரணியின் மகள் தமயந்தி தான் என்ற விஷயம் ஷைலஜாவுக்கும் அவளது மகள் ஆரத்தனாவுக்கும் தெரிய வந்த நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஷைலாஜாவும் ஆரதனாவும் நளனுக்கு கடைசி வரை தமயந்தி தான் அன்னபூரணியின் மகள் என்பது தெரிய கூடாது, அன்னபூரணி தொடர்பாக இருக்கும் ஆதாரங்களை அழிக்க திட்டம் போடுகின்றனர். மேலும் இவர்கள் எல்லாரும் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல அங்கு நளனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவன் கழுத்தில் இருக்கும் லாக்கெட்டையும் ஆட்டைய போடுகின்றனர்.
தமயந்தியின் தம்பி வருணை போதை பொருள் கேசில் சிக்க வைக்கின்றனர், இதனால் தமயந்தி செய்வதறியாது தவிக்க நளன் அவளுக்காக உதவ முன் வருகிறான். அடுத்து சமையல் காம்பிட்டேஷனின் அடுத்து ரவுண்ட் பற்றிய தெரிய வருகிறது, இவர்கள் போட்டிக்கு கிளம்பி செல்கின்றனர். இன்வெஸ்டர் நளனுக்காக விளையாடினா அவனுக்கு இன்வெஸ்ட்மென்ட் கிடைக்கும் நீயும் நல்லா இருக்கலாம் என்று பேச தமயந்தி அவருக்கு பதிலடி கொடுக்கிறாள்.
இதனால் கடுப்பாகும் இன்வெஸ்டர் நீ தமயந்தியை ஜெயித்தால் மட்டும் தான் இன்வெஸ் பண்ணுவேன். ஒரு வேளை சொத்து போய்ட்டா உன்னுடைய ஓட்டல் பிசினஸ் கனவையே ஒன்னும் இல்லாமல் பண்ணிடுவேன் என்று மிரட்டுகிறார். இதனையடுத்து போட்டி தொடங்க நளனுக்கும் தமயந்திக்கும் கடுமையான போட்டி நடக்கிறது.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, எனவே நளதமயந்தி சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Ethirneechal Serial: கடத்தப்பட்ட ஜனனி.. காணாமல் போன சித்தார்த் நிலை என்ன? எதிர்நீச்சலில் இன்று!