மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Ethirneechal Serial: கடத்தப்பட்ட ஜனனி.. காணாமல் போன சித்தார்த் நிலை என்ன? எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal Serial today episode written update April 3 : ஜனனியை ராமசாமியின் ஆட்கள் கடத்தி வைத்து இருக்கிறார்கள். கதிர் போட்டு வைத்திருக்கும் மாஸ்டர் பிளான் என்ன? எதிர்நீச்சலில் இன்று..
![Ethirneechal Serial: கடத்தப்பட்ட ஜனனி.. காணாமல் போன சித்தார்த் நிலை என்ன? எதிர்நீச்சலில் இன்று! Ethirneechal serial today episode written update april 3 janani gunasekran sakthi dharshini jeevanandham Ethirneechal Serial: கடத்தப்பட்ட ஜனனி.. காணாமல் போன சித்தார்த் நிலை என்ன? எதிர்நீச்சலில் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/03/4841efce081e93ece9c870edcaed79cb1712130353515572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எதிர்நீச்சல் ஏப்ரல் 3 ப்ரோமோ
Ethirneechal Serial Written Update: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 3) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரன் வீட்டில் தர்ஷினியை அலங்காரம் செய்து உட்கார வைத்து இருக்கிறார்கள். அனைவரும் அங்கே இருக்க, சக்தி பதட்டத்துடன் வீட்டுக்கு வந்து குணசேகரனிடம் சண்டை போடுகிறான். "மரியாதையா என்னோட பொண்டாட்டியையும் அவளோட குடும்பத்தையும் விட சொல்லுங்க" என மிரட்டி கேட்கிறான் சக்தி. ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாத குணசேகரன், "நிறுத்துடா... ஒரு வார்த்தை பேசின அப்புறம் தம்பின்னு கூட பார்க்கமாட்டேன்" என சொல்லி அனைவருக்கும் முன் அசிங்கப்படுத்துக்கறார். அதைப் பார்த்து உமையாள் சந்தோஷப்படுகிறாள்.
![Ethirneechal Serial: கடத்தப்பட்ட ஜனனி.. காணாமல் போன சித்தார்த் நிலை என்ன? எதிர்நீச்சலில் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/03/703ea8a4bc83fadc5a359dcb09bf52471712130282288572_original.jpg)
ராமசாமி உமையாளுக்கு போன் செய்து "ஜனனி அவ அம்மா தங்கச்சி எல்லாரும் வெளியே வரவே முடியாது" என அவர்கள் பிளான் போட்டு எப்படி அவளைக் கடத்தினார்கள் என்பதைப் பற்றி சொல்கிறார்கள்.
சக்தி கதிரிடம் ஜனனியை காணவில்லை என ஆவேசமாகப் பேச, கதிர் அவனை சமாதானப்படுத்துகிறான். "அவங்களே இப்ப அலறிக்கிட்டு வந்து ஜனனி அவங்க அம்மாவையும் கொண்டு வந்து விட்டுட்டு போவாங்க பாரு. அப்படிப்பட்ட ஒரு வேலையை பார்த்து வைச்சு இருக்கேன் தெரியும்ல" என அவன் பிளான் பண்ணி சித்தார்த்தை கடத்தி வைத்திருப்பதைப் பற்றி சொல்கிறான். அதைக் கேட்டு சக்தி அதிர்ச்சி அடைகிறான். இதுதான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
நேற்றைய எபிசோடில் ஜனனியை இன்ஸ்பெக்டர் அவளின் அம்மா வீட்டுக்குச் சென்று சோதனை செய்வதற்காக அழைத்துச் செல்கிறார். அவளை பின்தொடர்ந்து சென்ற சக்தியின் வண்டி பாதியிலேயே நின்று விடுகிறது. என்ன செய்வதென புரியாமல் தவிக்கிறான் சக்தி. ஆட்டோ பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பார்க்கிறான். ஆனால் இன்ஸ்பெக்டர் ஜனனியை அங்கேயே விட்டுவிட்டு வந்தது பற்றி சொல்கிறார். ஜனனியின் அம்மா வீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்து பார்க்கிறான் சக்தி. அவர்கள் சொன்ன விஷயம் சக்திக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
![Ethirneechal Serial: கடத்தப்பட்ட ஜனனி.. காணாமல் போன சித்தார்த் நிலை என்ன? எதிர்நீச்சலில் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/03/0e1d6253e3b0bc7879732a6c0eba0df51712130297007572_original.jpg)
தர்ஷினியை கண்டுபிடித்த ஸ்பெஷல் ஆபீசர் கொன்றவையை பார்ப்பதற்காக ஆபீஸ் செல்ல, அங்கே வெண்பாவைப் பார்த்து வருத்தப்படுகிறாள் ஈஸ்வரி. "அப்பா எங்க போனாருனு யாருக்குமே தெரியல. அப்பாவுக்கு ஏதாவது நடந்து இருக்குமோ என எனக்கு பயமா இருக்கு" என சொல்லி வெண்பா வருத்தப்பட்டு பேச, அதைப் பார்த்து ஈஸ்வரி சங்கடப்படுகிறாள்.
அந்த நேரத்தில் அங்கே வந்த கொன்றவையிடம் “தர்ஷினிக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்தது பற்றியும், ஜீவானந்தம் பற்றியும் எந்தத் தகவலும் தெரியவில்லை அதனால் அவரை கண்டுபிடிக்க உதவி வேண்டும்” எனக் கேட்கிறாள் ஈஸ்வரி. "ஜீவானந்தத்தை தேட நான் முயற்சி எடுக்கிறேன்" என நம்பிக்கை கொடுக்கிறாள். ஈஸ்வரி வெண்பாவை உடன் அழைத்து செல்கிறாள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion