Maari: மியூசிக் பாக்ஸை தேடிய மாரி.. தாரா எடுத்த அதிரடி முடிவு.. இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.
மாரி சீரியலில் தாரா ஜாஸ்மினிடம் மியூசிக் பாக்ஸ் பற்றி சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. முன்னதாக விக்ரம் மாரியிடம், 25 வருஷத்துக்கு முன்னாடி தேவியம்மா ஒரு மியூசிக் பாக்ஸ்ல ஒரு சீக்கிரட்டை மறச்சு வச்சுருக்காங்க. சூர்யாவுக்காக நாம மட்டும் அந்த மியூசிக் பாக்ஸ் இந்த வீட்ல எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சி எடுத்ததா உண்மை தெரிஞ்சிரும் என சொல்கிறார். அப்போது டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஏதோ பொருள் ஒன்று விழுந்து ஒரு இசையை எழுப்புகிறது. இதனால் தாரா நடுங்கி மயங்கி விழுகிறார்.
இன்றைய எபிசோடில் மியூசிக் பாக்ஸ் சத்தம் கேட்டதும் மயங்கி விழும் தாராவை டாக்டர் பரிசோதித்து பிரச்சினை எதுவும் இல்லை என கூறுகிறார். பின்னர் தாரா ஜாஸ்மினிடம் மியூசிக் பாக்ஸ் பற்றி சொல்கிறாள். தேவி தன் மகனுக்காக ஒரு ரகசியத்தை எழுதி அந்த மியூசிக் பாக்ஸ் உள்ளே வைத்து சென்று விட்டாள். அதை தேடி கண்டுபிடிக்க வேண்டும் அதை கண்டுபிடித்தால் தான் நான் இந்த வீட்டில் இருக்க முடியும் என பதறுகிறாள்.
View this post on Instagram
மேலும் சூர்யாவிற்கு அந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பாக சூர்யா என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவான். அதற்குள் அந்த மியூசிக் பாக்ஸ் கண்டுபிடிக்க வேண்டும் என்று தாரா விஷயத்தை சொல்கிறாள். அதேசமயம் தூங்கிக் கொண்டிருக்கும் மாரிக்கு விக்ரம் சொன்னது ஞாபகத்துக்கு வர எழுந்து சென்று மியூசிக் பாக்ஸை தேடுகிறாள்.
அப்போது ஒரு கை அவள் பின்னால் வந்து தொடுகிறது. பதறிப்போய் உடனே மாரி திரும்பி பார்க்க சூர்யா அங்கு நிற்கிறான். என்ன தெரிகிறது என்று அவர் கேட்க, மாரி ஒன்றுமில்லை என்று சொல்கிறார். முதல்ல போய் தூங்கு என்று சொல்ல மாரி சென்று படுத்து விடுகிறாள்.
மறுநாள் காலை மாரியை சூர்யா ஒரு செல்போன் கடைக்கு அழைத்துச் சென்று ஒரு புது செல்போன் வாங்கி அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறான். உடனே மாரி ஹாசினிக்கு வீடியோ கால் மூலம் பேச ஹாசினி தாராவிடமும் ஜாஸ்மினிடமும் வீடியோ காலில் மாரியை காட்டி வெறுப்பேத்த இருவரும் கடுப்பாகின்றனர்.
இதனையடுத்து தாரா, ஜாஸ்மின், சங்கரபாண்டி, ஸ்ரீஜா உள்ளிட்டோர் மாரியின் ஜாதகத்தை சாமியாரிடம் கொண்டு போய் காட்ட இந்த ஜாதகம் சக்தி வாய்ந்தது. இதை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்ல தாரா கோபமாகி வெளியே வருகிறார். உடனே ஜாஸ்மினுக்கும் சூர்யாவிற்கும் நாளைக்கே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண வேண்டும். சூர்யாவை எப்படியாவது நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன் என்று சொல்லி தாரா ப்ளான் பண்ணும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.