Maari: மாரியை வைத்து ஹாசினி செய்யும் சிறப்பான சம்பவம்.. மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
மாரி சீரியலில் தாரா சாமியார் மந்திரிச்சு கொடுத்த கயிற்றை சூர்யாவின் கையில் கட்டி விட்டு பூஜைக்கு அழைக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது.
மாரி சீரியலில் தாரா சாமியார் மந்திரிச்சு கொடுத்த கயிற்றை சூர்யாவின் கையில் கட்டி விட்டு பூஜைக்கு அழைக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. முன்னதாக ஜாஸ்மின் குடி போதையில் தன்னை அடித்த விஷயத்தை சொல்லி கைது செய்ய வந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகிறார். ஆனால் மாரி தயவு செய்து அரெஸ்ட் பண்ணாதீங்க. இந்த குடும்ப மானம் போய்விடும் என தெரிவிக்க, கடைசியில் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி செல்கிறார். இதனையத்து மாரியை எதிர்க்க மாந்திரீகத்தை தேடி ஜாஸ்மின் செல்கிறார்.
இன்றைய எபிசோடில் தாரா சாமியார் மந்திரிச்சு கொடுத்த கயிற்றை சூர்யாவின் கையில் கட்டி விட்டு நாளைக்கு பூஜை இருப்பதாகவும், நீயும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறார். சூர்யாவும் வருவதாக சம்மதம் சொல்கிறார். அதை மறைந்து இருந்து பிரியா கவனிக்கிறாள்.
View this post on Instagram
மறுநாள் காலை தாரா, ஸ்ரீஜா, சங்கரபாண்டி என மூவரும் சூர்யாவை கோயிலுக்கு அழைத்துச் செல்ல, பிரியா மாரியிடம் ஹாசினி அண்ணி கோயிலில் வெயிட் பண்ணுகிறார். நீங்க கிளம்பி போங்க என்று மாரியை அனுப்பி வைக்கிறாள். பின்னர் கோயிலுக்கு வெளியே காரில் ஜாஸ்மின் காத்திருக்க, சூர்யா உட்பட எல்லோரும் கோவிலுக்கு வருகின்றனர். அப்போது சாமியார் கோயில் குளத்தில் குளித்து விட்டு வரும்படி சூர்யாவை அனுப்பி வைக்க சங்கரபாண்டியன் சூர்யாவை அழைத்துச் செல்கிறான்.
இதனைடுத்து ஹாசனியிடம் மாரி கோயிலுக்கு வர சொன்னீங்க என்று கேட்க, ஹாசினி சமாளித்து கோயில் ஓரமாக வரவைத்து இங்கே வெயிட் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போகிறார். இதனிடையே குளித்து முடித்துவிட்டு பூஜைக்கு வரும் சூர்யா சாமி முன்னாடி உட்கார்ந்து பூஜை செய்கிறார். சாமியார் பிரசாதத்தை அந்த பொண்ணுக்கு கொண்டு போய் சாப்பிட கொடுங்க என்று சொல்லிக் கொடுக்கிறார். உடனே தாரா சங்கரபாண்டியிடம் ஜாஸ்மினுக்கு கொடுத்து விடு என்று சொல்கிறார்.
இதனால் சங்கரபாண்டியும் அந்த பிரசாதத்தை ஜாஸ்மினுக்கு கொடுக்கப் போக பின்னாலேயே ஹாசினி சென்று என்ன நடக்கிறது என வேடிக்கை பார்க்கிறார். இதற்கிடையில் காரில் ஜாஸ்மின் பாட்டு கேட்டுக் கொண்டு கொண்டிருக்க, சங்கரபாண்டி கதவை தட்டியும் சத்தம் கேட்காமல் இருக்கிறார். இதனால் சங்கர பாண்டி பிரசாதத்தை கார் மேலே வைத்துவிட்டு, மீண்டும் கதவை தட்ட ஹாசினி அந்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போகிறார்.
இதனையடுத்து ஜாஸ்மின் கதவு திறந்தவுடன் சங்கரபாண்டி பிரசாதத்தை பார்க்கிறார். ஆனால் வைத்த இடத்தில் பிரசாதம் இல்லாததை கண்டு பயந்தபடி நிற்கும் சங்கரபாண்டி சமாளித்துவிட்டு, சும்மாதான் தட்டினேன் என்று சொல்கிறார். மேலும் தாராவிடம் ஜாஸ்மின் பிரசாதத்தை சாப்பிட்டு விட்டதாக பொய் சொல்லி விடுகிறார்.
மறுபக்கம் கோவில் பின்னால் ஹாசினி மாரியிடம் இந்த பிரசாத்தை சாப்பிட சொல்லி கொடுக்க மாரி எதுக்கு என்று கேட்க காரணம் கேட்காமல் சாப்பிடுமாறு சொல்லி சாப்பிட வைக்கிறார். இறுதியாக சாமியார் விளக்கேற்ற சொல்ல ஹாசினி மாரியை விளக்கேற்ற சொல்கிறார். மாரியும் சூர்யாவும் ஒரே நேரத்தில் விளக்கு ஏற்றும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.