Karthigai Deepam: இசையமைப்பாளருடன் தொடர்பா? .. தீபாவை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா- கார்த்திகை தீபம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்தியால் ரெசார்ட்டை அடித்து உடைந்தது மாயா தான் என அருணுக்கு தெரிய வர அருண் அவளை அடிக்க பாய கார்த்திக் போலீஸிடம் ஒப்படைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தீபாவை மியூசிக் டைரக்டர் ரக்ஷன் டிராப் செய்ய தீபா அவரை வீட்டிற்கு அழைக்க ரக்சன் வேலையிருப்பதாக சொல்லி கிளம்புகிறார். இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த ராஜேஷ்வரி போட்டோ எடுத்து கொள்கிறாள்.
உடனே ஐஸ்வர்யாவிடம் சென்று போட்டோவை காட்டி தீபாவை அசிங்கப்படுத்த முடிவெடுத்து தீபாவுக்கும் ரக்சனுக்கும் தொடர்பு என மீடியாவில் செய்தியை பரப்ப வைக்கின்றனர். மறுபக்கம் வீட்டுக்கு வந்த தீபா ரக்சன் தன்னை ட்ராப் செய்த விஷயத்தை சொல்வதோடு அருண் விஷயம் என்னாச்சு எனவும் விசாரிக்கிறாள்.
மறுநாள் எல்லாரும் அபிராமிக்கு போன் போட்டு இது பற்றி விசாரிக்க பேப்பரை பார்த்து அவளும் அதிர்ச்சி அடைகிறாள். வீட்டில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு இது பற்றி பேச கார்த்திக் இது தப்பான நியூஸ் என நடந்தவற்றை சொல்ல அபிராமி அதை ஏற்காமல் கோபத்தில் ஏதோ சொல்ல வர சாமியார் சொன்ன விஷயம் நினைவுக்கு வர அமைதியாகி விடுகிறாள். தீபா செய்தியை பார்த்து கண்ணீருடன் ரூமுக்குள் சென்று விட கார்த்திக் ஆறுதல் சொல்கிறான்.
View this post on Instagram
எது பண்ணாலும் அபிராமி இப்படி அமைதியா இருக்க என்ன காரணம் என ஐஸ்வர்யா கன்பியூசியஸ் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.