Karthigai Deepam: ஐஸ்வர்யாவின் சதியில் சிக்கிய தீபா..கார்த்திகை தீபம் இன்றும், நாளையும் நடப்பது என்ன?
கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தர்மலிங்கத்திற்கு தர்மகத்தா பதவி கொடுக்க ஊர் மக்கள் முடிவெடுத்திருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தர்மலிங்கம் கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்காக சீர் கொண்டுவர ராஜேஸ்வரி என் பொண்டாட்டி சீர் செய்ய நீங்க யாரு? இவரே இவருடைய பொண்ணு இந்த வீட்டுக்கு ஒன்னும் போடாம தான் கட்டிக் கொடுத்தார், அப்படி இருக்கும்போது இவர் என் பொண்ணுக்கு சீர் செய்கிறாரா என்று அவமானப்படுத்தி பேசுகிறார்.
தர்மலிங்கம் என்னால் முடிந்ததை கொண்டு வந்திருக்கேன் வேண்டாம்னு சொல்லக்கூடாது என்று சொல்ல ராஜேஸ்வரி விடாமல் அவமானப்படுத்த அங்கு வரும் கார்த்திக் இதை பார்த்து ராஜேஸ்வரியிடம் மன்னிப்பு கேட்க சொல்ல அபிராமியும் ஆமா நீங்க பேசுனது தப்பு, நீங்க அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்று மன்னிப்பு கேட்க சொல்ல ராஜேஸ்வரி வேறு வழியின்றி மன்னிப்பு கேட்கிறார்.
இதனை தொடர்ந்து கார்த்திக் தர்மலிங்கத்தை வீட்டில் டிராப் செய்ய கூட்டிச் செல்ல அப்போது நான் சீர் செய்ய மட்டும் வரல தீபாவுக்கு தாலி மாத்தி போடணும் என சொல்கிறார். அப்படியே மறுபக்கம் தீபாவை பழிவாங்க ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் சேர்ந்து ஒரு பிளான் போடுகின்றனர்.
ஐஸ்வர்யா தீபாவிடம் மேங்கோ ஜூஸ் கேட்க தீபாவும் அதை ரெடி செய்ய இடையில் ஐஸ்வர்யா கூப்பிட என்னவென்று கேட்கப் போகும் போது கிச்சனுக்குள் வரும் ராஜேஸ்வரி மேங்கோ ஜூஸுக்கு பதிலாக பப்பாளி ஜூஸ் மாற்றி வைத்து மாம்பழத் தோலை அங்கிருந்து எடுத்து பப்பாளி பழத்தோலை போடுகிறார். இதை கவனிக்காத தீபா ஐஸ்வர்யாவுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க அவள் குடிக்க போகும் சமயத்தில் தடுத்து நிறுத்தும் ராஜேஸ்வரி அது பப்பாளி பழம் ஜூஸ், ஐஸ்வர்யாவோட கர்ப்பத்தை கலைக்கவே தீபா இப்படி பண்ணியிருக்கா என்று பெரிய பிரச்சனை செய்ய அபிராமியின் தீபாவை பிடித்து கடுமையாக திட்டி விடுகிறார்.
அடுத்ததாக இரவு நேரத்தில் ரவுடிகளுடன் அருணின் ரெசார்ட்டுக்கு வரும் மாயா அந்த ரெஸ்பெக்ட் முழுவதையும் போட்டு உடைக்க சொல்கிறார். ரவுடிகளின் அதை உடைக்க தொடங்க மாயா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். மறுநாள் இந்த விஷயம் அறியும் அருண் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.