Karthigai Deepam: அட்வைஸ் பண்ண பரமேஸ்வரி! கடுப்பாகும் ரேவதி! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

Karthigai Deepam Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக் ரேவதி என இருவரும் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு விருந்துக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரேவதிக்கு பரமேஸ்வரி பாட்டி அட்வைஸ்:
அதாவது, இருவரையும் ஆர்த்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்ற பரமேஸ்வரி பாட்டி இருவரையும் உட்கார வைத்து விருந்து வைக்கிறார். ரேவதி சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ சென்ற சமயத்தில், பாட்டி கார்த்தியிடம் எப்படியாவது நீங்க சேர்ந்து வாழணும் என்று சொல்கிறாள். ரேவதி இதை கேட்டு விடுவாளா? என்ற பில்டப் ஒரு பக்கம் எகிறிகிறது.
அடுத்ததாக பிளாஷ்பேக்கில் பாட்டி ரேவதியை தனியாக அழைத்து அவன் எதையும் பிளான் பண்ணி எல்லாம் செஞ்சா மாதிரி தெரியல. இந்த கல்யாணம் நடக்க உங்க அம்மா தானே காரணம்? அவள் மேல கோபப்படாத வாழ்க்கையை வாழ பாரு என்று அறிவுரை வழங்குகிறாள்.
கடுப்பாகும் ரேவதி:
இருவரும் விருந்து முடித்துவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். சாமுண்டீஸ்வரி கார்த்தியை அழைத்து என்ன மாப்ள விருந்து எல்லாம் எப்படி இருந்துச்சு? என விசாரிக்கிறாள். உன்னிடம் உங்கள பாக்க அமெரிக்காவில் இருந்து என் பிரண்டு ஒருத்தி வரா என்று சொல்ல ரேவதி கடுப்பாகிறாள்.
சாமுண்டீஸ்வரி கல்யாணம் நடந்து முடிஞ்சா சொந்தக்காரங்க, கல்யாணத்துக்கு வராதவங்க நான் வந்து பார்க்க தான் செய்வாங்க என்று சொல்லி ரேவதியின் வாயை அடக்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.