"ஒரே கல்லில் இரண்டு மாங்கா" சாமுண்டீஸ்வரிக்கு எதிராக சந்திரகலா சதி!
கார்த்திகை தீபம் தொடரில் சிவனாண்டி, சந்திரகலா இணைந்து சாமுண்டீஸ்வரிக்கு எதிராக சதித்திட்டம் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விறுவிறுப்பாக நகரும் இந்த தொடரின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி தலைமையில், பெண்களால் பெண்களுக்காக கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்காக முடிவெடுக்கப்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமுண்டீஸ்வரியின் சவால்:
அதாவது சிவனாண்டி சாமுண்டீஸ்வரி சந்தித்து கோவில் கட்டுவது நாம் ஆண்கள் செய்ய வேண்டிய வேலை. தேவையில்லாத வேலை பார்க்காத என்று எச்சரிக்க சாமுண்டீஸ்வரி பெண்களாக எல்லாம் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டுறேன் என சவால் விடுகிறாள்.
என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சி, அவ கையால இந்த கலசத்துக்கு பூஜை பண்ணி கும்பாபிஷேகத்தை நல்லபடியா நடத்தி முடிக்கிறேன் என்று சொல்கிறாள். இதையடுத்து, கோவில் கட்டும் பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கலசத்தை உங்க வீட்ல வச்சு பத்திரமா பூஜை பண்ணி கொண்டு வாங்க என்று சொல்கின்றனர்.
சந்திரகலா, சிவனாண்டி சதி:
இதைத்தொடர்ந்து சந்திரகலா மற்றும் சிவனாண்டி இருவரும் சந்தித்து, கலசத்தை வீட்டுக்கு கொண்டு வந்ததும் அதை திருடி விடலாம். சாமுண்டீஸ்வரி தலை குனிந்து நிற்பாள். அதே நேரத்தில் டிரைவர் கார்த்திக் மேல பழியை போட்டா அவனையும் வீட்டை விட்டு துரத்தி விடுவாள். ஒரே கல்லில் இரண்டு மாங்கா என திட்டம் போடுகின்றனர்.
அடுத்ததாக மறுநாள் காலையில் மேளதாளத்துடன் தடபுடலாக ஊர் மக்கள் கலசத்தை கொண்டு வர சாமுண்டீஸ்வரி ரேவதி கிட்ட கொடுங்க அதை பக்தியோட பூஜை செய்து கலசத்தை பார்த்துக் கொள்வாள் என்று சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.