Karthigai Deepam: "கொழுந்தன் கூட ஜாலியா இருந்துட்டு" மாட்டிக் கொண்ட மன்மத லீலை மாயா - என்ன நடந்தது?
மாயா பயன்படுத்திய கருத்தடை மாத்திரை அட்டை சிக்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி. இதில், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் கார்த்தியிடம் மாயாவின் கருத்தடை மாத்திரை அட்டை சிக்கிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நடக்குமா கல்யாணம்?
அதாவது, கார்த்திக் மயில்வாகனத்திடம், "மாயா தப்பானவனு தெரிந்து போச்சு. ஆனால் மகேஷ் தப்பானவனா இருந்தா மட்டும் இந்த கல்யாணத்தை நிறுத்தலாம். இல்லனா கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்" என்கிறான்.
மறுபக்கம் ரேவதி ஆசிரமத்தில் தீபா என்ற குழந்தை தூங்கியதும் "இன்னும் கொஞ்ச நாள் தான். தீபாவை நான் என்னுடனே வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறேன் அதுவரைக்கும் கொஞ்சம் நல்லபடியா பார்த்துக்கோங்க" என்று சொல்லி விடை பெறுகிறாள்.
மாயாவுக்கு வரும் மிரட்டல்:
இங்கே கார்த்திக், மயில்வாகனத்தின் இன்னொரு ரகசிய நம்பரில் இருந்து மாயாவுக்கு போன் போட்டு "உன்னை பற்றிய உண்மை தெரிந்து விட்டது" என சொல்லி மிரட்டச் சொல்கிறான். மயில்வாகனம் மாயாவுக்கு போன் போட்டு, "நீ யாருன்னு எனக்கு நல்லா தெரியும்.. கொழுந்தன் கூட ஜாலியா இருந்து கர்ப்பம் ஆகிட்டு இப்போ கர்ப்பத்தை கலைத்து விட்டாயா? டாக்டர் மல்லிகாவை தெரியுமா? என்று கேட்க மாயா அதிர்ச்சி அடைந்து போனை கட் செய்து விடுகிறான்.
மீண்டும் போன் செய்யும் மயில்வாகனம், ஒரு லட்ச ரூபா பணத்தை கொடுத்தால் ஒரு விஷயத்தை யாரிடம் சொல்லாமல் இருப்பேன் என்று மிரட்ட மாயா ஃபோனை வைக்கிறான். பிறகு மகேஷிடம் சொல்லி பணத்தை கொடுத்து இந்த விஷயத்தை முடிக்க முடிவெடுக்கிறாள்.
2 லட்சம் ரூபாய்:
மகேஷ் பணத்துக்கு என்ன செய்வது என்று கேட்க, மாயா ரேவதியை சந்தித்து கல்யாண செலவுக்கு பணம் தேவைப்படுவதாக சொல்லி இரண்டு லட்சம் ரூபாய் கேட்க, ரேவதி மாயாவை அழைத்துச் சென்று சாமுண்டீஸ்வரி முன்னாடி நிறுத்தி இவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பணத்த குடுங்க என்று சொல்கிறாள்.
மயில்வாகனம் மற்றும் கார்த்திக் நம்ப பணத்தை வாங்கி நம்ம கிட்டயே கொடுக்கப் போறாங்க என நினைத்துக் கொள்கின்றனர். மயில்வாகனம் "இவ பெரிய கேடியா இருக்கா, நாம ஒரு லட்சம் கேட்டா இவ இங்க இரண்டு லட்சம் கேட்டு வாங்கி ஆட்டைய போட பாக்குறா" என சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

