Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலுக்கு தனி வரவேற்பு உள்ளது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதியின் வேண்டுகோளுக்கு மனம் மாறிய கார்த்திக், கோவில் பூஜையில் பங்கேற்க சம்மதித்திருந்த நிலையில், இன்று கதைக்களம் மேலும் விறுவிறுப்பாக நகர்கிறது.
ரகசிய புகைப்படம்:
ரேவதியின் திட்டத்தின்படி, கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் தம்பதியராக கோவில் பூஜையில் கலந்துகொள்கின்றனர். ஆனால், அவர்களுக்கே தெரியாமல் இந்த பூஜைக்கு வந்திருந்தவர்கள் சாதாரண பக்தர்கள் அல்ல. சந்திரகலா முன்கூட்டியே ஏற்பாடு செய்த ஆட்கள் பூஜை முழுவதையும் கண்காணித்து வருகின்றனர்.
பூஜையின் போது கார்த்திக் மற்றும் ரேவதி இணைந்து வழிபடுவது, சடங்குகளில் கணவன்-மனைவியாக பங்கேற்பது போன்ற காட்சிகளை அவர்கள் ரகசியமாக புகைப்படம் எடுத்து சந்திரகலாவுக்கு அனுப்புகின்றனர். அந்த புகைப்படங்களை பார்த்த சந்திரகலா தனது திட்டம் வெற்றி பெறப்போகிறது என்ற மகிழ்ச்சியில் திளைக்கிறாள்.
ஆதாரத்தைப் பார்த்த சாமுண்டீஸ்வரி:
இதற்கிடையில், இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியிடம் தெரிவிக்க முயற்சிக்கின்றனர். முதலில் இதை நம்ப மறுக்கும் சாமுண்டீஸ்வரி, பின்னர் ஆதாரமாக காட்டப்படும் புகைப்படங்களை பார்த்து கடும் அதிர்ச்சியடைகிறாள். கோபத்தின் உச்சத்துக்கு சென்ற அவள், உடனடியாக சம்பவம் நடைபெறும் கோவிலுக்கு விரைந்து செல்கிறாள்.
அங்கு நேரில் சென்று, பூஜையில் தம்பதியராக அமர்ந்திருக்கும் கார்த்திக் - ரேவதியை பார்த்தவுடன் சாமுண்டீஸ்வரியின் கோபம் வெடிக்கிறது. அவர்களிடம் சென்று கேள்வி கேட்க முயற்சிக்கும் அவளை, சந்திரகலா சாமர்த்தியமாக தடுத்து நிறுத்துகிறாள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















