Karthigai Deepam: ரோகிணியுடன் சேரத் துடிக்கும் மயில்வாகனம்! கார்த்திக் மீது சந்திரகலாவுக்கு சந்தேகம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகைத் தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ். இந்தத் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
சந்திரகலாவுக்கு சந்தேகம்:
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சொன்ன கதையால் சந்திரகலா ஷாக்கான நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. மயில்வாகனம் ரோகிணியுடன் சேர முயற்சிக்க அவள் அவனுடன் சண்டை போட்டு நெருங்க விடாமல் செய்கிறாள். இதைத் தொடர்ந்து சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
"எனக்கு என்னமோ கார்த்திக் கிட்ட நம்ம வீடியோ தான் இருக்கோ" என்று சந்தேகம் இருப்பதாக சொல்ல, சிவனாண்டி "அதெல்லாம் இருக்காது" என சொல்கிறான். மேலும் "உங்க அக்கா ஏதாவது கேட்டார்களா?" என்று விசாரிக்க, சந்திரகலா "அக்கா எதுவும் சொல்லல" என்கிறாள். அடுத்ததாக பரமேஸ்வரி பாட்டி, கார்த்திக்கு போன் செய்து தனது பேத்திகளுக்கு பொங்கலுக்கு துணி எடுத்து கொடுக்கணும் என ஆசையை சொல்ல, கார்த்திக் சரி எடுத்து கொடுங்க என சொல்கிறான்.
துணிகளை மாற்றிய கார்த்திக்:
பிறகு பாட்டி துணிகளை கொண்டு வந்து கொடுக்க கார்த்திக் வாங்கி கொள்கிறான். ஏற்கனவே சாமுண்டீஸ்வரி கார்த்தியிடம் எல்லோருக்கும் துணி எடுத்துட்டு வர சொல்லி இருந்த நிலையில், கார்த்திக் பரமேஸ்வரி பாட்டி கொடுத்த துணிகளை மாற்றி கொடுத்து விடுகிறான்.
அதன் பிறகு மயில் வாகனம் ரோகிணியிடம் எப்படி சேருவது? என யோசித்து, கரண்ட் ஷாக் வைத்து ரோகிணியை காப்பாற்றுவது போல் காப்பாற்றி அவளுடன் சேர திட்டம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

