Karthigai Deepam: அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
தமிழ் சின்னத்திரையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இது சீரியலின் நேற்றைய எபிசோடில் சிதம்பரத்தின் மனைவி மாயா வரட்டும் கைக்கு வந்து அந்த கார்த்தி சும்மா விடமாட்டேன் என்று சபதம் எடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கார்த்திக் தலையில் கட்டுடன் வீட்டுக்கு வர அதை பார்த்து எல்லோரும் பதறுகின்றனர். பிறகு கார்த்திக் அதெல்லாம் ஒன்றும் இல்லம்மா நாளைக்கு தீபாவோட பிறந்தநாள் அதை செலப்ரேட் பண்ணனும் என்று சொல்ல நம்ம வீட்ல பெண்களோட பிறந்த நாளை கொண்டாடும் பழக்கம் கிடையாது என்று அபிராமி சொல்ல தீபாவுக்காக இதுவரைக்கும் நாம எதுமே செஞ்சது இல்ல அதனால இது செய்யணும்னு ஆசைப்படுகிறேன் என்று சொல்லி அபிராமியையும் சம்மதிக்க வைக்கிறான்.
அது மட்டுமல்ல நாளைக்கு ஸ்பெஷல் கெஸ்ட் ஆக பல்லவி வர போறாங்க என்று கார்த்திக் சொல்ல மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள். ஐஸ்வர்யாவும் பல்லவி தீபா தானே அப்படி இருக்கும்போது வேற யார் வர போறா என குழப்பம் அடைகிறாள். அருண் நாளைக்கு எனக்கு நிறைய மீட்டிங் இருக்கு, பர்த்டே பார்ட்டியில் இருக்க முடியாது என்று வாழ்த்து சொல்லி விட சொல்கிறான்.
பிறகு ஐஸ்வர்யாவுக்கு சிதம்பரத்தின் மேனேஜர் ஃபோன் செய்து சிதம்பரம் மனைவி மாயா மேடம் உங்களை பார்க்க வேண்டும் என சொன்னதாக கூப்பிட ஐஸ்வர்யாவும் கிளம்பி செல்கிறாள். இங்கே மீனாட்சி தீபாவுக்கு தகவல் சொல்ல போன் பண்ண கார்த்திக் என்ன நீ தகவல் சொல்ல தயாராகிட்டீங்களா என்று ஷாக் கொடுக்கிறான்.
மேலும் தீபா தான் பல்லவி என்பது எனக்கு தெரிஞ்சு போச்சு இந்த விஷயம் தீபாவுக்கு தெரிய போது நாளைக்கு வரைக்கும் நீங்க அத பத்தியும் பேசாம அமைதியா இருக்கணும் என மீனாட்சியை ஆஃப் பண்ணுகிறான்.
இங்கே ஹாஸ்பிடல் வந்த ஐஸ்வர்யா மாயாவை சந்திக்க மாயா அந்த கார்த்தியை பழிவாங்காம விடக்கூடாது எனக்கு உங்களுடைய உதவி தேவை என இருவரும் கைகோர்க்க ஐஸ்வர்யா உங்க கூட்டணிக்குள் ரூபஸ்ரீயையும் சேர்த்துக் கொள்கிறாள்.
தீபா வீட்டுக்கு வர கார்த்தி தீபா அவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்டே இருந்து மறைச்சிட்டீங்க என்று சொல்ல தீபா ஒன்றும் புரியாமல் நிற்கிறாள். உடனே கார்த்திக் நாளைக்கு உங்களோட பிறந்தநாள்னு நீங்க சொல்லாமலே தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்ல தீபா உங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.