Karthigai Deepam: கல்யாணத்தில் அவமானப்பட போகும் அபிராமி.. ஐஸ்வர்யா சதி - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபா வெளியே சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தீபாவும் கார்த்திக்கும் ரெஸ்ட்டாரெண்ட் சென்றிருக்க அப்போது தீபா கார்த்திக்கு தெரியாமல் கூல்ரிங்க்ஸை மாற்றி வைத்து விட கார்த்திக் கூல் ட்ரிங்க்ஸ் என்னங்க ரொம்ப டேஸ்ட்டாக இருக்கு என கார்த்திக் கேட்க தீபாவும் ஆமாம் எனக்கும் அப்படி தான் இருக்கு என சொல்ல கார்த்திக் ரொம்ப நடிக்காதீங்க நீங்க கூல்ட்ரிங்கை மாற்றியதை பார்த்துட்டேன் என சொல்கிறான்.
இதனை தொடர்ந்து DJ யாராவது டேன்ஸ் ஆட ரெடியா இருக்கீங்களா என்று கேட்க தீபா கையை தூக்கி கார்த்திக்காக நடனமாடி இப்போவது மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க என கெஞ்ச கார்த்திக் முடியாது என சொல்லி விடுகிறான். அடுத்து தீபா வெளியே வரும் போது ஆனந்த் வேறொரு பெண்ணோடு உட்கார்ந்து ஒரே ஜூஸில் ரெண்டு ஸ்ட்ரா போட்டு குடித்து கொண்டிருக்க இதை பார்த்து அதிர்ச்சி அடையும் தீபா கார்த்திக்கை கூப்பிட்டு காட்ட அவனும் அதிர்ச்சி அடைகிறான்.
ஆனந்துக்கு போன் செய்ய அவன் பெங்களூரில் இருப்பதாக பொய் சொல்ல இவருவரும் அவர்களை பின் தொடர்ந்து செல்கின்றனர். மறுபக்கம் கோவிலுக்கு வந்த அபிராமி தீபாவுக்கு போன் போட தீபா போனை எடுக்காமல் இருக்கிறாள். கார்த்திக்கு போன் போட நாட் ரீச்சேபிள் என வருகிறது. இதனால் கடுப்பாகி வீட்டிற்கு வந்து விடுகிறாள். இங்கே இவர்கள் சிக்னலில் ஆனந்தை மிஸ் செய்து விடுகின்றனர்.
தீபா கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் ஐஸ்வர்யா திருட்டு தனமாக போனை அவளது பேக்கில் போட்டு விட அபிராமி தீபாவை திட்டி விடுகிறாள், தீபா நடந்தே வேகவேகமாக கோவிலுக்கு ஓடி வந்து கோவில் மூட போகும் தருணத்தில் விளக்கு போட்டு அபிராமி வேண்டுதலை நிறைவேற்றுகிறாள். மறுநாள் தீபா குளிக்க போன சமயத்தில் ஐஸ்வர்யா ரூமுக்குள் நுழைந்த கல்யாண பெண்ணுக்கு எடுத்த புடவையை எடுத்து விட்டு அதற்கு பதிலாக வெள்ள புடவையையும் விபூதியையும் வைத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.