Idhayam Serial: ஆதியை வைத்து பாரதிக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் - நடந்தது என்ன? இதயம் சீரியல் இன்றைய அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியல் இன் நேற்றைய எபிசோடில் ஆதி பாரதிக்கு முன்பாக ஸ்கூலுக்கு வந்திருந்த நிலையில் தமிழ் டிராயிங் வரைந்து அதை அதிக இடம் காட்ட ஆதி சூப்பர் என பாராட்டி போட்டோ எடுத்துக் கொள்கிறான்.
ஆதியை பார்த்து ஷாக்காகும் பாரதி:
ஆபீஸில் ஆதிக்காக காத்திருக்கும் பாரதி ஒரு கட்டத்தில் ஸ்கூலுக்கு நேரமாகிறது என்று கேட்கும் சொல்லிவிட்டு கிளம்புகிறாள். இங்கே ஸ்கூலில் ஏற்கனவே ஆதி வந்து உட்கார்ந்து இருக்க அதை பார்த்த பாரதி ஷாக் ஆகிறாள்.
அதையும் பாரதியை பார்த்து ஷாக்காகி வாங்க பாரதி உக்காருங்க என்று காட்ட சொல்ல பாரதி நீங்க எப்ப வந்தீங்க என்று கேட்க நான் ஒரு வேலை விஷயமாக வெளியே வந்திருந்தேன் அது சீக்கிரம் முடிஞ்சுடுச்சு தமிழ் சொன்னது ஞாபகம் வந்தது அதனால அப்படியே காரை யூ ட்ரன் போட்டு இங்க வந்துட்டேன் என பாரதி முறைக்க ஆதி நம்பல போலயே என்று நினைக்கிறான்.
கடவுள் பெயர் சொல்லும் ஆதி:
பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு கிப்ட் கொடுக்கும் நிகழ்வு தொடங்க தமிழரசிக்கு சிறப்பு பரிசு கிடைக்கிறது. பிறகு மேடையில் தமிழ் தனக்கு உதவியது ஆதி தான் என்று சொல்லி மேடைக்கு வாங்க ஃபிரண்ட் என்று கூப்பிட பாரதி அதிர்ச்சி அடைய ஆதி சமாளித்து மேடைக்கு வருகிறான்.
பிறகு நான் தமிழுக்கு வெறும் சப்போட்டா தான் இருந்தேன் இதுக்கெல்லாம் முக்கிய காரணம் இன்னொருத்தர் இருக்காங்க என்று சொல்ல பாரதி தன்னுடைய பெயரை சொல்லுவான் என ஆவலோடு எதிர்பார்க்க ஆதி கடவுளின் பெயரை சொல்லி பாரதியை வெறுப்பேற்றுகிறான்.
இதனால் பாரதி கோபப்பட்டு வெளியே வர ஆதியும், தமிழும் பின்னாடியே ஓடி வந்து சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர். தமிழ் நான் இந்த காம்பெடிஷன்ல கலந்துக்கலன்னு தான் சொன்னேன். ஆனா பிரண்டு தான் எனக்கு ப்ராக்டிஸ் கொடுத்து கலந்துக்க வச்சாரு என்று பிளாஸ்கட்டை ஓபன் செய்ய பாரதிக்கு உண்மை தெரிய வருகிறது.
அதன் பிறகு பாரதி ஆதி மற்றும் தமிழிடம் மன்னிப்பு கேட்கிறாள். ஆதி உங்களுக்காக ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கேன். கார்ல இருக்கு இப்ப எடுத்துட்டு வாங்க என்று தமிழை அனுப்பி வைத்துவிட்டு பாரதியிடம் நீங்க கோபப்பட்டா, அவ்வளவு அழகா இருக்கீங்க. அதை ரசிப்பதற்காகத்தான் நான் உங்களை அடிக்கடி கோபப்பட வைக்கிறேன் என்று சொல்ல பாரதி வெட்கப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.