Anna Serial: முத்துப்பாண்டியை விழுந்த அடி.. ஏமாந்த ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்
கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவபாலன் முத்துப்பாண்டி இசக்கி கொடுமைப்படுத்துவதை பற்றி சொல்ல வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது வீட்டுக்கு வந்த சிவபாலன் பரணி மற்றும் சண்முகத்தின் மற்ற தங்கைகளிடம் முத்துப்பாண்டி இசக்கி போட்டு அடிக்கும் விஷயத்தை சொல்ல அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். சண்முகம் வீட்டுக்கு வரேன் சிவபாலன் முத்துப்பாண்டி அடிக்கும் விஷயத்தை சொல்ல போக அங்கே எது நடந்தாலும் அதை இங்கு வந்து சொல்லாத இசக்கிக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லி விடுகிறான்.
இதனைத் தொடர்ந்து பரணியும் மற்ற மூன்று தங்கைகளும் ஒன்று சேர்ந்து முத்துபாண்டியை அடி வெளுக்க முடிவெடுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சண்முகத்துக்கு தெரியாமல் இவர்கள் ஆண் வேஷம் போட்டுக் கொண்டு முத்து பாண்டியை அடிக்க கிளம்புகின்றனர். எதிரே சண்முகம் வர இவர்கள் அவனிடம் திருநங்கை போல நடித்து ஏமாற்றி அங்கிருந்து எஸ்கேப் ஆகின்றனர்.
மறுபக்கம் முத்துப்பாண்டி தன்னுடைய பாதுகாப்புக்காக கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிகிறான். இதனைத் தொடர்ந்து ஆண் பாசத்தில் வரும் இவர்கள் முத்துப்பாண்டியை சுற்றி வளைக்க அவன் யார் நீங்கலாம் என்று கேட்க உன்னை அடிக்கத்தான் வந்திருக்கோம் என்று சொல்லி கண்ணில் மிளகாய் பொடியை தூவி அடிக்கின்றனர்.
கண்ணை திறக்க முடியாமல் தட்டு தடுமாறி வீட்டுக்கு வரும் முத்துப்பாண்டி யாரோ நாலு பேர் ஊருக்கு புதுசா வந்திருக்காங்க அவங்க என்னை அடித்து விட்டதாக சொல்ல சௌந்தரபாண்டி பாக்கியத்தை தண்ணி எடுத்துட்டு வர சொல்ல பாக்கியம் நீங்களே எடுத்துக்கோங்க என்று உள்ளே சென்றுவிட இசக்கியை கூப்பிட அவள் சுடுதண்ணி எடுத்துட்டு வரட்டுமா என்று கேட்கிறாள்.
இதனால் முத்துப்பாண்டி அதை என் கண்ணையே அழிச்சிடுவா நீயே போப்பா என்று சொல்ல இதுக்கு சௌந்தரபாண்டி கழுதை பால் தான் சரியான வழி என்று சொல்ல முத்துப்பாண்டி ஷாக் ஆகிறான். இதனை தொடர்ந்து சண்முகம் வழியில் துடிப்பதை பார்த்து பரணிக்கு போன் போட்டு கூப்பிட பரணி வர முடியாது என மறுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Ethirneechal: ஜனனிக்கும் சக்திக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி... எதிர்நீச்சலில் இன்று நடப்பது என்ன?