Ethirneechal: ஜனனிக்கும் சக்திக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி... எதிர்நீச்சலில் இன்று நடப்பது என்ன?
Ethirneechal : ஜீவானந்தம் போலீசிடம் இருந்து எஸ்கேப்பான விஷயம் அறிந்து அதிர்ச்சியடையும் ஜனனி சக்தி. குணசேகரன் பேச்சுக்கு சரியான பதிலடி கொடுத்த ரேணுகா என எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (பிப்ரவரி 23) எபிசோடில் அழையா விருந்தாளியாக குணசேகரன் வீட்டுக்குள் வந்த ஜனனியின் அப்பத்தா தன்னுடைய கலக வேலையை தொடங்கியது மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு நாட்களுக்கு தங்கி இருந்து குணசேகரன் வீட்டில் பிரச்சனை கொழுந்து விட்டு எரிவதை பார்க்க வேண்டும் என இரு நாட்களுக்கு தங்கி விட்டு வருகிறேன் என சொல்லி மகளையும் பேரன்களையும் அனுப்பி வைக்கிறார்.
ஈஸ்வரியும் ஜீவானந்தமும் நீதிபதியின் ஆணையின் படி காவலில் வைத்து விசாரிக்க தீர்ப்பு வழங்கியதால் அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். அப்போது ஜீவானந்தம், தர்ஷினியை தேடி கண்டுபிடிப்பதற்காக கான்ஸ்டபிள் ஒருவர் அவரை தப்பித்து ஓட உதவி செய்கிறார். ஜீவானந்தம் தப்பித்து ஓடுவதை பற்றி அறிந்த போலீஸ்காரர்கள் அவரை வலைவிரித்து தேடுகிறார்கள். உதவி செய்த கான்ஸ்டபிளுக்கு ஈஸ்வரி நன்றி சொல்கிறாள்.
ரேணுகாவின் அம்மா மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என பணம் கொடுத்து அவர்களை ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைத்துக்கொள்ள சொல்கிறார். வாழ்க்கையில் முன்னேறி குணசேகரன் முகத்தில் கரியை பூச வேண்டும் என சொல்கிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரனை சந்திக்க வக்கீல் வீட்டுக்கு வருகிறார். "எதுவுமே வேணாம் என தைரியமா சொன்னானுங்க இல்ல, அப்புறம் எதுக்கு அவனுங்க பேர்ல சொத்து. எல்லாத்தையும் என்னோட பேர்ல எழுதி கொடுக்க சொல்லு" என விசாலாட்சி அம்மவிடம் சொல்லி கொண்டு இருக்கிறார் குணசேகரன். அதை ஜனனியின் அப்பத்தா கேட்டு சந்தோஷப்படுகிறார். அவர்கள் பேசுவதை வாசலில் உட்கார்ந்து கேட்டு கொண்டிருந்த கதிர் உள்ளே வந்து அவரை பார்த்து முறைக்கிறான்.
ஜீவானந்தம் எஸ்கேப்பாகி விட்டது பற்றி தர்ஷினி வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள புதிய ஸ்பெஷல் ஆபீஸர் சொல்ல அதை கேட்ட ஜனனியும் ஈஸ்வரியும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
"கடத்துனவனுக்கு உடந்தையாக இருந்தவ இங்க இருக்கும் போது அவ எதுக்கு சிஎம் செல்லுக்கு போனா?" என ஜனனியை குணசேகரன் திட்ட "அப்படினு நீங்க சொன்னா நாங்க அதை உடனே நம்பிடணுமா?" என ரேணுகா நக்கலாக கேட்கிறாள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து பதட்டத்துடன் கிளம்புகிறார் குணசேகரன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
ஜீவானந்தம், தர்ஷினியை கண்டுபிடித்து விடுவாரா? அல்லது அவர் எஸ்கேப்பானதால் வழக்கு வேறு பக்கம் திசை திரும்புமா? நாளுக்கு நாள் பரபரப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல்.