Bharathi Kannamma 2: முடிவுக்கு வருகிறதா விஜய் டிவியின் பிரபல சீரியல்?.. வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் 2வது சீசன் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் 2வது சீசன் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் ஒவ்வொரு சீரியல்களும் முதல் சீசன்களை கடந்த இரண்டாவது சீசன்களும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சில சீரியல்கள் விறுவிறுப்பாக செல்கிறது. சில சீரியல்கள் முந்தைய சீசனில் பெற்ற டிஆர்பியை தக்க வைக்க முடியாமல் தவிக்கிறது.
பாரதி கண்ணம்மா
இப்படியான நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. முதலில் ரோஷினி ஹரிப்பிரியன் கண்ணம்மாவாக நடித்த நிலையில், பின்னர் சில காரணங்களால் அவர் விலகினார். இதனைத் தொடர்ந்து வினுஷா தேவி அந்த கேரக்டரில் நடித்தார். மேலும் அருண் பிரசாத், ஃபரினா அசாத், கண்மணி மனோகரன், ரூபா ஸ்ரீ, காவ்யா அறிவுமணி என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த சீரியல் 1036 எபிசோடுகளுடன் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி முடிவடைந்தது.
பாரதி கண்ணம்மா 2
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 6 முதல் பாரதி கண்ணம்மா சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் ஹீரோவாக சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் ஹீரோவாக நடித்த சிபு சூர்யன் தான் பாரதியாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்டு தொடந்து சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் முதல் சீசனை போல இல்லாமல் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பின் தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா சீசன் 2 திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
என்ன காரணம்?
டிஆர்பி ரேட்டிங் தான் காரணம் என சொல்லப்பட்டாலும் விரைவில் விஜய் டிவியில் நடிகை ராதிகா தயாரித்துள்ள ‘கிழக்கு வாசல்’ சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்காக மற்ற சீரியல்களின் நேரம் மாற்றப்படும் அல்லது ஒளிபரப்பாவது நிறுத்தப்படும் என்பதால் அதில் பாரதி கண்ணம்மா சீரியல் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.