Sun Tv Serial: கயல் சீரியலை பிரைம் டைமில் இருந்து தூக்கியடித்த சன் டிவி! புதிதாக ஒளிபரப்பாகும் 3 தொடர்கள் என்னென்ன தெரியுமா?
சன் தொலைக்காட்சியில் 3 புதிய சீரியல்களின் வருகை காரணமாக கயல் சீரியல் ஒளிபரப்பு செய்யப்படும் நேரம் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை கவரும் வகையில் சீரியல்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இப்போது சன் தொலைக்காட்சியில் 3 புதிய சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. அதிகப்படியான சீரியல்களை ஒளிபரப்பு செய்வதில் சன் தொலைக்காட்சி தான் முதலிடத்தில் உள்ளது.
அதே போல் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான, கயல் சீரியல் கடந்த ஓரிரு மாதமாக தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று வருவதால், டிஆர்பி ரேட்டிங்கிலும் சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்த சீரியலுக்கு முடிவு கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி சன் டிவி தரப்பிலிருந்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது பிரைம் டைமில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த கயல் சீரியலுக்கு பதிலாக, புதிதாக துவங்கியுள்ள ஆடுகளம் சீரியலை ஒளிபரப்ப உள்ளனர். இந்த சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் இப்போது இரவு 7.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பு செய்ய்யப்பட இருக்கிறது. மேலும், கயல் சீரியலை இரவு 10 மணிக்கு மாற்றியிருக்கிறார்கள். மேலும், லட்சுமி மற்றும் புன்னகை பூவே சீரியல்களுக்கு பதிலாக பராசக்தி மற்றும் தங்க மீன்கள் சீரியல்களை ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புதிதாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கும் வினோதினி சீரியலுக்கான நேரத்தை மட்டும் இன்னும் சீரியல் குழு முடிவு செய்யவில்லையாம்.





















