மேலும் அறிய

Ethir Neechal: எதிர்நீச்சல் சீரியலுக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன நடந்தது?

சீரியலின் ஹைலைட் என சொன்னால் அது ஆதிகுணசேகரன் கேரக்டர் தான். அதில் மறைந்த இயக்குநர் மாரிமுத்து தான் நடித்து வந்தார். கிட்டதட்ட சீரியல் அனைவரிடத்திலும் சென்று சேர அவர் மிக முக்கிய காரணமாக இருந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த டிஆர்பி ரேட்டிங் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்நீச்சல்:

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் நடிகை தேவயானி முதன்மை கேரக்டரில் நடித்த கோலங்கள் சீரியல் ஒளிபரப்பானது. இந்த சீரியலை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் திருச்செல்வம். அந்த சீரியலில் அவர் தொல்காப்பியன் என்னும் கேரக்டரில்  நடித்திருந்தார். இப்படியான நிலையில் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் சன் டிவியில் திருச்செல்வம் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.

இந்த சீரியலானது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் சீரியல்தான் தொடர்ந்து பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 ஆக இருந்து வந்தது. பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கத்துக்கு எதிராக செல்லும் இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானது. எதிர்நீச்சல் சீரியலில் கனிகா, ஹரிப்பிரியா இசை, மதுமிதா, கமலேஷ், சத்யப்பிரியா, விபு ராமன், சபரி பிரசாந்த், காயத்ரி கிருஷ்ணன், பிரியதர்ஷினி, பாம்பே ஞானம், விஜே விமல், சத்யா தேவராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் திருச்செல்வமும் ஜீவானந்தம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். 

திக்குமுக்காடும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம்:

இந்த சீரியலின் ஹைலைட் என சொன்னால் அது ஆதிகுணசேகரன் கேரக்டர் தான். அதில் மறைந்த இயக்குநர் மாரிமுத்து தான் நடித்து வந்தார். கிட்டதட்ட சீரியல் அனைவரிடத்திலும் சென்று சேர அவர் மிக முக்கிய காரணமாக இருந்தார். மாரிமுத்து மறைவுக்கு அந்த கேரக்டரில் நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். என்றாலும் மாரிமுத்து கேரக்டரில் இவரை ரசிகர்களால் பொருத்தி பார்க்க முடியவில்லை. மேலும் மாரிமுத்து இறந்த பிறகு கிட்டதட்ட ஒரு மூன்று வார காலத்துக்கு அவர் இல்லாமலேயே காட்சிகளை நகர்த்தினார்கள். 

கதையும் எங்கெல்லாமோ இழுத்துக் கொண்டு சென்றது. ஆனால் புதிய ஆதி குணசேகரனுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். இப்படியான நிலையில் வேல ராமமூர்த்தி அறிமுகமான சில நாட்களிலேயே அவர் இல்லாமல் காட்சிகள் சென்றதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். இந்த வாரம் தான் மீண்டும் அவர் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே கடந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங் வெளியானது. இதில் அதிர்ச்சி தரும் விதமாக எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி ரேட்டிங் குறைந்துள்ளது,

குறைந்த டி.ஆர்.பி.ரேட்டிங்:

அதன்படி கடந்த வாரம் 10.66 ஆக இருந்த டிஆர்பி ரேட்டிங் இந்த வாரம் 9.55ஆக குறைந்துள்ளது. சன் டிவி சீரியல்களில் முதல் இடம் வானத்தை போல, இரண்டாவது இடம் கயல், மூன்றாவது இடம் சுந்தரி, 4வது சிங்கப்பெண்ணே, 5வது இடத்தில் எதிர்நீச்சல் இடம் பெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இனியும் சுவாரஸ்யம் இல்லாமல் சீரியல் சென்றால் டிஆர்பி ரேட்டிங்கில் அடி விழும் என்பதால்  சீரியல் குழு ரசிகர்களை கவரும் வகையில் திரைக்கதையை நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது எதிர்நீச்சல் சீரியல் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget