Ethirneechal: ஜீவானந்தத்திடம் உதவி கேட்ட ஈஸ்வரி.. கௌதமுக்கு தெரிய வந்த உண்மை.. எதிர்நீச்சலில் இதுவரை நடந்தது என்ன?
Ethirneechal Sep 21 episode : ஜீவானந்தம் மனைவியை கொன்றது யார் என்பதை நண்பன் மூலம் விசாரித்து தெரிந்து கொள்கிறான் கெளதம். குணசேகரனை தேடி கண்டுபிடிக்க ஜீவானந்தத்தின் உதவியை நாடும் ஈஸ்வரி.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மா குணசேகரனை காணவில்லை அவனை நானும் இவள்களுடன் சேர்ந்து நோகடித்து விட்டேன் என சொல்லி புலம்பி அழுகிறார். ஞானமும் கதிரும் அம்மாவை சமாதானப்படுத்தி நாங்கள் அண்ணனை எங்கு இருந்தாலும் தேடி கண்டுபிடித்து அழைத்து வருகிறோம் அதுவரையில் நீ தைரியமாக இருக்க வேண்டும் என சொல்கிறார்கள்.
கரிகாலன் நானும் உங்களுடன் வருகிறேன் என சொல்கிறான் ஆனால் அவனை வேண்டாம் நீ இங்கேயே இரு என சொல்லிவிடுகிறார்கள். ஜான்சி ராணியோ "நீங்கள் அண்ணனை வீட்டுக்கு கூடி வரும் வரை நான் இந்த வீட்டையும் வீட்டில் இருப்பவர்களை பார்த்து கொள்கிறேன்" என சொல்கிறாள். ஞானமும் கதிரும் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு கிளம்புகிறார்கள்.
கௌதமுக்கு நண்பன் ஒருவன் மூலம் ஜீவானந்தம் மனைவியை சுட்டு கொன்றது யார் என்பதை விசாரிக்கிறான். அந்த நண்பன் நல்ல தகவலுடன் கௌதமை சந்திக்க வருகிறான். "கவுஞ்சியை சுற்றி விசாரித்ததில் இந்த கொலை சம்பவத்தில் மூன்று பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஒருவர் மதுரையை சேர்ந்த ஆதி குணசேரன், அவர் தம்பி கதிர்வேலன் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிள்ளிவளவன். இதில் குணசேகரன் நேரடியாக ஈடுபடவில்லை. கதிர் கூட சென்றாலும் சுட்டது கிள்ளிவளவன் தான். கிள்ளிவளவன் டீமில் இருக்கும் ஒருவன் என்னுடைய நண்பன். அவன் போதையில் அனைத்தையும் உளறிவிட்டான். இதை நான் தான் சொன்னேன் என்பது வெளியில் தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்" என சொல்கிறான் கௌதமின் நண்பன்.
ஈஸ்வரி குணசேகரன் எங்கே இருக்கிறார் என்பதை சென்று விசாரிக்க ஜீவானந்தத்தை போய் சந்திக்க போவதாகவும் அவரிடம் போய் ஹெல்ப் செய்ய முடியுமா என சொல்லி ஈஸ்வரி கிளம்புகிறாள். ஜான்சி ராணி கிச்சனில் சென்று சமைக்க வந்து விடுகிறாள். அவளை நந்தினியும் ரேணுகாவும் சேர்ந்து விரட்டுகிறார்கள். ஆனால் ஜான்சி ராணி போக முடியாது இதை போய் உங்க அத்தையை சொல்ல சொல்லி சொல்கிறாள். விசாலாட்சி அம்மாவோ அவளே சமைக்கட்டும் என சொல்லிவிடுகிறார்.
குணசேகரன் வீட்டை விட்டு போனதை பற்றி ஜீவானந்தத்திடம் சொல்கிறாள் ஈஸ்வரி. "இது தான் அவர் போனது முதல் தடவையா?" என ஜீவானந்தம் கேட்ட "இந்த முறை அவர் கொஞ்சம் சீரியஸாக இந்த விஷயத்தை எடுத்துகிட்டாரோ என மற்றவர்கள் நினைக்கிறார்கள்" என்கிறாள் ஈஸ்வரி. "இதனால் என்னுடைய குழந்தைகள் கை நீட்டப்படுகிறார்கள். அவர் எழுதிய சொத்து உயிலில் எனக்கும் என்னுடைய பிள்ளைகளுக்கும் எதுவும் இல்லை. அதில் எனக்கு சந்தோஷம் தான். ஒரு மூணாவது மனுஷன் மேல இருக்கும் இரக்கம் மட்டுமே அவர் மேல் உள்ளது" என்கிறாள் ஈஸ்வரி.
"நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு நான் அவரை தேடி பார்க்கிறேன்" என்கிறார் ஜீவானந்தம். "உங்களை தேட சொன்னது எனக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனால் எனக்கு வேற வழி தெரியவில்லை" என்கிறாள் ஈஸ்வரி. ஆனால் ஜீவானந்தம் வெண்பாவுக்காக கொஞ்சம் தயங்குகிறார். "வெண்பாவை நான் பார்த்துக்கொள்கிறேன்" என ஈஸ்வரி தைரியம் கொடுக்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.