மேலும் அறிய

Ethirneechal: கதிருக்கு திடீரென வந்த அக்கறை: மகளை காணாமல் கதறி அழும் ஈஸ்வரி... தர்ஷினியை கடத்தியது யார்? எதிர்நீச்சலில் பரபரப்பு

Ethirneechal: கதிருக்கு சப்போர்ட்டாக அப்பத்தாவை எதிர்த்து பேசும் தாரா. உள்ளம் குளிர்ந்து போன கதிர். தர்ஷினியை கட்டி போட்டு அடைத்து வைத்திருப்பது யார்? எதிர்நீச்சலில் இன்று

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜனவரி 24) எபிசோடில் ராமசாமி குணசேகரனிடம் தர்ஷினியை கண்டுபிடித்து தருகிறோம் என சொல்லிவிட்டு செல்கிறார்கள். குணசேகரனின் தாய் மாமன், கதிரிடமும் ஞானத்திடமும் வந்து அந்த பிள்ளையை எப்படியாவது தேடி கண்டுபிடித்து கூட்டிட்டு வாங்க என சொல்லி அழுகிறார். கதிரும் ஞானமும் வாசலிலேயே உட்கார்ந்து தர்ஷினியை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

சக்தி, ஜனனி மற்றும் ஈஸ்வரி என அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள். குணசேகரன், ஜீவானந்தம் மீது புகார் கொடுத்தது பற்றியும் அவரை விசாரிக்க போவது பற்றியும் இன்ஸ்பெக்டர் சொல்கிறார். ராமசாமியும், கிருஷ்ணாசாமியும் ஸ்டேஷன் உள்ளே இருந்து வெளியில் வருவதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஜனனிக்கு எதிராக அவர்கள் சவால் விடுகிறார்கள். பதிலுக்கு ஜனனியும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என சொல்லிவிட்டு செல்கிறாள்.

Ethirneechal: கதிருக்கு திடீரென வந்த அக்கறை: மகளை காணாமல் கதறி அழும் ஈஸ்வரி... தர்ஷினியை கடத்தியது யார்? எதிர்நீச்சலில்  பரபரப்பு

வீட்டுக்கு வந்த தர்ஷனிடம் தாரா, "அக்கா ஓடிப்போறேன்னு தானே சொன்னாங்க அப்படியிருக்கும் போது அவங்களை யாரோ கடத்திட்டு போயிட்டாங்கனு சொல்றாங்களே" என கேட்கிறாள். விசாலாட்சி அம்மா தர்ஷனிடம் "எங்க உங்க ஆத்தா ஊர் சுத்த கிளம்பிட்டாளுங்களா?" என கேட்கிறார். தர்ஷினி குத்துசண்டை போடுறதுக்காக நேபாளுக்கு போய் இருக்கு என ஜான்சி சொல்ல தர்ஷன் அவளிடம் எகிறுகிறான்.

கதிர் வந்து தர்ஷனிடம் எங்க அவர்கள் என விசாரிக்கிறான். அதற்கு விசாட்சி அம்மா அவர்களை அசிங்கப்படுத்த கோபமான தாரா "அப்பத்தா... எதுக்கு எங்க அப்பாவ திட்டுறீங்க. அவரு என்ன தப்பு பண்ணாரு. அவர் சரியா தான் பேசுறாரு" என சொல்லி விசாலாட்சி அம்மாவை எதிர்த்து பேசி கதிரை உள்ளே அழைத்து செல்கிறாள். ஐஸ்வர்யா ஞானத்தை மாடிக்கு அழைத்து செல்கிறாள்.

ஈஸ்வரியும் மற்றவர்களும் கோயிலுக்கு சென்று உட்கார்ந்து இருக்கிறார்கள். தர்ஷினி நல்ல படியா வந்துடுவாள் என நந்தினி நம்பிக்கை கொடுக்கிறாள். சக்தி விசாரித்த இடத்தில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.  அதை கேட்டு ஈஸ்வரி கதறி கதறி அழுகிறாள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

ALSO READ | Bhavatharani: இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா, தாரா மற்றும் தர்ஷன் சமையல் அறைக்கு சென்று சமைக்கிறார்கள். அதை பற்றி விசாலாட்சி அம்மாவிடம் சொல்லி ஏத்தி விடுகிறாள் ஜான்சி ராணி. "இன்னும் முளைக்கவே இல்லை. அதுங்க எல்லாம் என்ன அதட்டுதுங்க" என சொல்லி விசாலாட்சி அம்மாவின் மூளையை சலவை செய்கிறாள் ஜான்சி.

Ethirneechal: கதிருக்கு திடீரென வந்த அக்கறை: மகளை காணாமல் கதறி அழும் ஈஸ்வரி... தர்ஷினியை கடத்தியது யார்? எதிர்நீச்சலில்  பரபரப்பு

கோயிலில் இருக்கும் ஈஸ்வரி தர்ஷினி எங்கே இருக்கிறாள் என தெரிவியவில்லையே என வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறாள். "நாம எல்லாரும் வீட்டுக்கு போனா தர்ஷினியோட போவோம். இல்லனா தேடிகிட்டே கிடப்போம்" என நந்தினி சொல்கிறாள். வீட்டில் கதிரை தாரா நன்றாக பார்த்து கொள்கிறாள். "இதை நான் யார்கிட்டேயும் சொல்லலை உங்க கிட்ட தான் அப்பா சொல்றேன்" என சொல்லி தாரா ஏதோ சொல்ல கதிர் தாராவை கட்டியணைத்துக் கொள்கிறான்  கதிர். நந்தினிக்கு கதிர் போன் செய்து பேசுகிறான். "என்ன அதட்டி கூப்பிட்டாலும் நான் வீட்டுக்கு வரதா  இல்லை" என அவள் சொல்ல "உன்ன யாரடி இங்க வரச் சொன்னா? எப்படியாவது முயற்சி பண்ணி தர்ஷினிய கூட்டிட்டு வந்துருங்க. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா தாரா இப்ப என்னை பத்துக்குறா" என சொல்லி கதிர் அழ நந்தினி சந்தோஷத்தில் அழுகிறாள்.

தர்ஷினியை கட்டி போட்டு ஏதோ ஒரு இடத்தில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். ஆனால் அவளை யார் கடத்தி வைத்து இருப்பது என்பது ஒரே சஸ்பென்ஸாகவே உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
"ஒட்டுண்ணி காங்கிரஸ்.. டிரைவர் சீட்டுக்காக அடிச்சிக்கிறாங்க" மோடி அட்டாக்!
Embed widget