மேலும் அறிய

Bhavatharini : இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்

Ilayaraja Daughter Bhavatharini Passed Away: புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் பாடகி பவதாரிணி திடீரென மரணமடைந்தார்.

Ilayaraja Daughter Bhavatharini: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி(Bhavatharini) காலமானார்.  இவருக்கு வயது 47. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இவர் கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி  இளையராஜா மற்றும் ஜீவா ராஜய்யா தம்பதியினருக்குப் பிறந்தார். 

இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார். புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீர் மரணம். பாரதி படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்று பாடி மக்கள் மனதில் குடிகொண்டு தேசிய விருதை வென்றவர் பவதாரணி.  இவர் இன்று அதாவது ஜனவரி 25ஆம் தேதி மாலை 5.30 மணிக்கே காலமானதாக கூறப்படுகின்றது. புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாளை சென்னைக்கு விமானம் மூலம் அவரது உடல் கொண்டுவரப்படுகின்றது. இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இளையராஜாவும் இலங்கையில் உள்ளார். 

தந்தை இளையராஜா சகோதரர்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோரது இசைகளில் இசையமைத்துள்ளார்.  இவர் இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். இவரது குரலில் பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் பாரதி படத்தில்  வரும் மயில்போல பொண்ணு ஒன்னு பாடலுக்கும், ராமன் அப்துல்லா படத்தில் இடம் பெற்றுள்ள என் வீட்டு ஜன்னல் வழி ஏன் பாக்குற பாடலுக்கு எப்ப்போதும் தனி ரசிகர்கள் உண்டு. அதேபோல் அழகி படத்தில் வரும் ஒளியிலே தெரிவது தேவதையா பாடலுக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். 

கடந்து 5 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் இன்று காலமானார். இவர் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சபரிராஜ் ஹோட்டல் தொழில் செய்து வருகின்றார். பவதாரிணியைப் பொறுத்தவரையில் பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட காலத்திற்குப் பின்னர் இவர் சமீபமாக மூன்று படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தாதாக கூறப்படுகின்றது. 

ரேவதி இயக்கத்தில் ஷோபனா நடித்த மித்ர் மை ஃபிரெண்ட் என்ற படத்திற்கு பவதாரிணி இசையமைத்துள்ளார். இவரது இசையில் இலக்கணம், அமிர்தம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்திப் படமான பிர் மிலாங்கே படத்திற்கும் இசையமைத்துள்ளார். 


Bhavatharini Songs: சோகத்தில் ராஜா குடும்பம்; மனதை மயக்கிய பவதாரிணியின் பாடல்கள் லிஸ்ட்

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget