Ethirneechal: ஆதிரையிடம் அடிவாங்கிய ஜான்சி.. ஆவேசத்துடன் குணசேகரன்.. எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal : அதிரடியாக முடிவு எடுத்த ஆதிரையிடம் வம்பு செய்து அறை வாங்கிய ஜான்சி ராணி. எஸ்.கே.ஆர் வீட்டுக்கு சென்று பிரச்சனை செய்து குணசேகரன்...
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கதிர் அடிபட்டு மருத்துவமனையில் கிடப்பதை பார்த்து ஆவேசப்படுகிறார் குணசேகரன். கதிரை இந்த நிலைக்கு ஆளாகியவர்களை சும்மா விடமாட்டேன் என சபதமிடுகிறார். சத்தம் போடுவதை அறிந்த மருத்துவர் வந்து அவர்களை வெளியே அனுப்புகிறார்.
வெளியே வந்த குணசேகரன், கதிரின் இந்த நிலைக்கு எஸ்.கே.ஆர் அல்லது ஜீவானந்தம்தான் காரணமாக இருக்கும் என சொல்ல, கோபமான ஈஸ்வரி அது "எப்படி ஜீவானந்தம் தான் செய்து இருப்பார் என உறுதியாக சொல்கிறீர்கள். அவர் ஏன் இதை பண்ணனும். அப்ப நீங்க தான் ஆள் வைச்சு உங்க தம்பியை அனுப்பி ஜீவானந்தம் மனைவியை போட்டுத்தள்ள சொன்னீங்களா?. அந்த எஸ்.கே.ஆர் தம்பி அருணை நீங்கதான் ஆள் வைச்சு ஏதாவது பண்ணீங்களா? இனிமேல் தான் உங்களுடைய ஆணவம் எல்லாம் அடங்கப்போகுது" என சொல்ல அதிர்ச்சியான குணசேகரன் முகமே மாறிவிடுகிறது.
கதிரின் இந்த நிலைக்கு யார் காரணமோ அவர்களை வெட்டாமல் விடமாட்டேன் என சொல்லி விசாலாட்சி அம்மாவையும் ஆதிரையையும் அழைத்து கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறார் குணசேகரன்.
வீட்டுக்கு வந்த குணசேகரனை வீட்டு பெண்களுக்கு எதிராக மேலும் ஏத்தி விடுகிறாள் ஜான்சி ராணி. ஜனனியிடமும், ஈஸ்வரியிடமும், ஆதிரை அருண் குடும்பத்தை எதுவும் செய்ய வேண்டாம் என சொல்லி கெஞ்சுகிறாள்.
"அருணை போட்டுத்தள்ள தான் சொன்னேன் ஆனால் காலை மட்டும் உடைச்சுட்டாங்க. இந்த ஈஸ்வரி எலெக்ஷனின் தோத்து போய் அசிங்கப்பட்டு நிக்கணும். அதற்காக தான் அவளை இன்னும் விட்டு வைச்சு இருக்கேன்" என ஜான்சி ராணியிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஆதிரை, ஜனினியிடமும், ஈஸ்வரியிடமும் எங்கோ கிளம்புவதாக சொல்லி கிளம்புகிறாள். ”எங்க போற ஆதிர?” என அவர்கள் கேட்டும் அவள் எதுவும் பதில் சொல்லாமல் ஆதிரை கிளம்பும்போது, அங்கே வந்த ஜான்சி ராணி "எங்கடி கிளம்பிட்ட?" என கேட்டு கையை பிடித்து இழுக்க ஜான்சி ராணியை ஓங்கி அறைந்து விடுகிறாள் ஆதிரை. அதை பார்த்து ஜனனியும் ஈஸ்வரியும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
குணசேகரன், ஞானத்தையும் கரிகாலனையும் அழைத்து கொண்டு எஸ்.கே.ஆர் வீட்டுக்கு சென்று ஆவேசமாக அரசு என கத்துகிறார். எஸ்கேஆரும், சாருபாலாவும் குணசேகரன் வந்து கலாட்டா செய்வதை பார்க்கிறார்கள். பரபரப்புடன் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) ப்ரோமோ வெளியானது.