Ethirneechal : கெத்து காட்டிய அப்பத்தா... திருவிழாவை நோக்கி நகரும் எதிர்நீச்சல் கதைக்களம்... என்ன சஸ்பென்ஸ் காத்திருக்கிறது?
Ethirneechal Oct 19 : 40% ஷேர் பற்றி விழாவில் சொல்ல போகிறேன். ஜீவானந்தம் கண்டிப்பா வருவாரு என அப்பத்தா சொல்ல சந்தோஷத்தில் கதிர். நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் என்ன நடந்தது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 19) எபிசோடில் கதிர் ஞானத்திடம் "நான் ஊருக்கு இரண்டு நாள் முன்னாடியே கிளப்பிடுவேன். போய் அங்க எல்லா வேலையையும் ரெடி பண்ணி வைக்கணும். என்னோட வளவனும் கரிகாலனும் வருவாங்க. நீ இந்த வீட்ல இருக்க எல்லாத்தையும் கூட்டிட்டு வந்துடு. இந்த தடவை எந்த தடங்கலும் இல்லாம முடிச்சுடணும். அண்ணன் அங்க வந்து இறங்குறப்ப முதல் பரிசா இதுங்க உசுர தான் கொடுக்கணும் " என்கிறான்.
அப்போது ஆதிரை வந்து அப்பத்தா உங்க எல்லாரையும் வர சொன்னாங்க. ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமும் என சொல்லி வர சொல்கிறாள். விசாலாட்சி அம்மாவையும் அழைத்து செல்கிறாள் ஆதிரை. மாடியில் அப்பத்தா மருமகள்கள் மற்றும் பிள்ளைகளுடன் பேசி கொண்டு இருக்கிறார். கதிர் மாடிக்கு வந்ததும் "பட்டு டார்லிங்.." என கூப்பிட அப்பத்தா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வரேன் என சொல்கிறார்.
என்ன அதிசயமா நீங்க கூப்பிட உடனே வந்துட்டாங்க என தர்ஷினி கேட்க "திருவிழா முடியுற வரைக்கும் அப்படிதான். அதுக்கு அப்புறம் எல்லாத்திலுமே பெரிய மாற்றம் தெரியும்" என்கிறார் அப்பத்தா. அப்பத்தா வெளிய வந்து அனைவரையும் உட்கார சொல்கிறார். அப்போது ஜான்சி ராணி வந்து அருகில் உட்கார அவளை "போய் அங்க ஓரமா நில்லு. நீ இந்த வீட்டோட சாபக்கேடு" என்கிறார். அவளும் முறைத்து கொண்டே போய் மூலையில் நிற்கிறாள்.
ரேணுகாவையும் நந்தினியை அழைத்து சோபாவில் உட்கார சொல்கிறார். "என்ன எல்லாரையும் கூட்டி வைச்சு பிரச்சினை பண்றீங்களா" என கேட்கிறார் விசாலாட்சி அம்மா. "நான் உன்னை உட்கார சொன்னேன் அதை நான் மரியாதை குறைவா நினைக்கலை. அப்போ அவங்க உட்கார்ந்தா என்ன தப்பு?" என்கிறார் அப்பத்தா. நந்தினியும் ரேணுகாவும் தயங்க அப்பத்தா அவர்களுக்கு தைரியம் கொடுத்து உட்கார சொல்கிறார். கெத்தாக அவர்கள் இருவரின் மனைவிகளும் உட்காருவதை பார்த்து புகைகிறார்கள் கதிரும் ஞானமும்.
"திருவிழாவுக்கு அடுத்த நாள் காலை தான் நான் பங்க்ஷன் வைச்சு இருக்கேன். அந்த பங்க்ஷனுல வைச்சு அந்த 40 % ஷேர் பற்றி எல்லாருக்கும் முன்னாடியும் சொல்லிடுவேன்" என்கிறார் அப்பத்தா. "அது எதுக்கு அங்க சொல்லணும். இங்கேயே எல்லாரும் இருக்கும் போதே சொல்ல வேண்டியது தானே?" என்கிறார் விசாலாட்சி அம்மா. "அது முடியாது அது என்னோட முடிவு" என்கிறார் அப்பத்தா. "எங்க அண்ணனோட சொத்துல நீங்க எப்படி முடிவு எடுப்பீங்க?" என்கிறான் ஞானம். "அவனுக்கு பணத்தையும் கொடுத்து தொழில் ஆரம்பிக்க உதவியது நான். இது வரைக்கும் இந்த உண்மை யாருக்காவது தெரியுமா?" என்கிறார் அப்பத்தா.
"நாங்க எல்லாருமே விழாவுக்கு இரண்டு நாள் முன்னாடியே கிளம்பிடுவோம்" என அப்பத்தா சொன்னதும் "நீங்களுமா?" என்கிறான் கரிகாலன். "அப்போ நீங்களும் முன்னாடியே கிளம்புறீங்களா விசாலாட்சி?" என அப்பத்தா கேட்க "நான் என்னோட மகன் வந்த உடனே அவனோட தான் திருவிழாவுக்கு வருவேன்" என்கிறார் விசாலாட்சி அம்மா.
"நீ நல்லா ஏற்பாடு பண்ணு நாங்க எல்லாரும் வந்து சேர்ந்துருவோம். ஆமா ஜீவானந்தம் வருவாரா?" என கதிர் கேட்க "கண்டிப்பா" என்கிறார் அப்பத்தா. அதை கேட்டு சந்தோஷமாக கதிர் கிளம்ப மற்றவர்கள் அவன் பின்னாலேயே போகிறார்கள்.
நந்தினி அப்பத்தாவிடம் "அடிக்கடி ஜீவானந்தம் வருவாரா? கேக்குறது பயமா இருக்கு" என்கிறாள். "நீங்க எல்லாரும் இருக்கும் போது எனக்கு என்ன பயம் இருக்கு" என்கிறார் அப்பத்தா. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.