ஹீரோயின் மட்டும் தான் வேற! 'எதிர்நீச்சல் 2' சீரியலில் வலிமையான பெண்களாக கம்பேக் கொடுக்கும் 4 நாயகிகள்!
எதிர்நீச்சல் 2 சீரியல் கூடிய விரைவில் சன் டிவியில் துவங்கும் என்பதை அறிவிக்கும் விதமாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சன் டிவி தொலைக்காட்சியில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருந்தது எதிர்நீச்சல். இந்த ஆண்டு முடிவுக்கு வந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கும் என சன் டிவி தரப்பில் இருந்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதால், இந்த சீரியலின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சன் டிவி சீரியல்:
சன் டிவியில் கோலங்கள் சீரியலை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் திருச்செல்வம். இதை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், போன்ற பல சீரியல்களை இயக்கினார். கடைசியாக 2022 ஆம் ஆண்டு சன் டிவியில் துவங்கப்பட்ட 'எதிர்நீச்சல்' சீரியலை இயக்கி வந்தார். உண்மையிலேயே தான் சந்தித்த ஆணாதிக்கம் நிறைந்த மனிதர் ஒருவரை மையமாக வைத்து தான் இந்த சீரியலை இவர் இயக்கி இருந்தார். இந்த சீரியலில் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் கன்னட சீரியல் நடிகை மதுமிதா நடித்து வந்தார்.
மேலும் கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஹரிப்ரியா ஆகியோர் முன்னிலை வேடத்தை ஏற்று நடித்தனர். இரண்டு வருடங்கள் TRP-யில் முதல் இடத்தை பிடித்த இந்த தொடர், நடிகர் மாரிமுத்து மரணத்திற்கு பின்னர் பலத்த அடிவாங்க துவங்கியது. வேல ராம மூர்த்தியை ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட பின்னரும் மற்ற சீரியல்களின் ஆதிக்கத்தால் இந்த சீரியல் போர் அடிப்பது போல் உணர்வதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.
எனவே 'எதிர்நீச்சல்' சீரியல் நேரத்தை வேறு ப்ரைம் டைமுக்கு மாற்றக் கூறி, சன் டிவி தரப்பில் இருந்து இயக்குனருக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த திருச்செல்வம் அதிரடியாக சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார். இது குறித்து அவரே தன்னுடைய பேட்டிகளில் கூறி காரணத்தை உடைத்தார்.
எதிர்நீச்சல் 2
அவர் கூறியது போலவே இந்த சீரியல் 10 நாட்களில் முடிவுக்கு வந்த நிலையில், கூடிய விரைவில் இந்த சீரியலின் இரண்டாவது பாகம் உருவாகும் என்றும் அறிவித்தார். இந்த சீரியலில் நடித்த நடிகர்களே இரண்டாவது பாகத்திலும் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுமிதா எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக புது புது அர்த்தங்கள் சீரியலில், தேவயானிக்கு மருமகளாக நடித்து வந்த பார்வதி கதாநாயகி ஆக கமிட் ஆனார். கனிகா, ஹரிப்பியா மற்றும் பிரியதர்ஷினி நீலகண்டன் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரங்களில் தொடர்கின்றனர்.
இந்த சீரியலில் படப்பிடிப்பு துவங்கி, சீரியல் வெளியீட்டுக்கு தயாராகிவிட்ட நிலையில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. எதிர்நீச்சல் சீரியலுக்காக ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்த நிலையில், இரண்டாம் பாகம் எப்போது துவங்கும் என எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.