மேலும் அறிய

EthirNeechal Serial: அப்பத்தாவை கொல்ல பிளான்.. அப்பாவிடம் சவால் விட்ட ஜனனி.. எதிர்நீச்சலில் நேற்று நடந்தது என்ன?

சன் டிவியில் விறுவிறுப்பாக செல்லும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் (அக்டோபர் 12) என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். 

சன் டிவியில் விறுவிறுப்பாக செல்லும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் (அக்டோபர் 12) என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். 

காரில் ஞானம், கதிர், கரிகாலன் 3 பேரும் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது கதிரிடம் பேசும் ஞானம், “ஆடிட்டர் சொன்ன மாதிரி அண்ணன் முன்ன மாதிரி இல்ல. அவரோட பேச்சு எல்லாம் மாறிடுச்சு. அன்னிக்கு போகும்போது கூட குடும்பத்தை இறுக்கி பிடிச்சிக்கன்னு சொன்னாரு. எல்லாத்தையும் ஒரு கட்டுக்குள்ள வைக்கணும். அந்த வீட்டு பெண்கள், குழந்தைகள் எல்லாம் ஓவரா, திமிரா பேசுறாங்க. எல்லாத்தையும் சேர்த்து அடக்கணும்” என சொல்ல, இதையெல்லாம் செய்றது பெரிய விஷயம் இல்ல, அதுக்கு நீ எங்க பக்கம் இருக்கணும் என கதிர் கூறுகிறான். 

இதற்கு கரிகாலனும் ஆமாம் என சொல்ல, உன் பொண்ணு இரண்டு சொட்டு கண்ணீர் விட்டாலே நீ மனசு மாறிடுற என நக்கலாக பேசுகிறான். இதனால் டென்ஷனாகும் ஞானம், “எங்க அண்ணனை கூட இருந்து பார்த்தவன். எங்களுக்குள்ள என்ன நடந்தாலும் அது வேற, எவனாவது 3வது மனுஷன் வந்தான்னு வையேன், நாங்க எல்லாருமே சேர்ந்து அடிப்போம்” என தெரிவிக்கிறான். உடனே, அப்ப அண்ணன் சொன்னதை எந்த பிசிறும் இல்லாம முடிக்கணும் என கதிர் ஆவேசப்பட்ட, அப்பத்தாவை கொலை செய்யணுமா என கேட்க, ஞானம் அதிர்ச்சியாகிறான். 

உன்ன விட எனக்கு நிறைய விஷயம் தெரியும். நானும் கதிர் மாமாவும் ரொம்ப நாளா அப்பத்தாவை கொல்ற விஷயத்துல குறியா இருக்கோம் என கரிகாலன் எடுத்துக் கொடுக்க, அப்பத்தா மற்றும் அந்த ஜீவானந்தம் ரெண்டு பேரையும் கொல்றது உறுதி என கதிர் கோபத்தில் பேசுகிறான். ஈஸ்வரி அவனை பார்க்க அடிக்கடி திருட்டுத்தனமா போய்கிட்டு வர்றாங்கன்னு உனக்கு தெரியுமா, ஒன்னு நீ எங்களோட இரு, இல்லையா விலகி இரு, இந்த நடுவுல நிக்காத என ஞானத்தை அசால்ட்டாக கதிர் டீல் செய்கிறான்.

இதனையடுத்து வீட்டில் ஜனனி அப்பாவிடம் ஈஸ்வரி, புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் நிலைமை குறித்து பேசுகிறார். ஜனனியை இந்த வீட்டுக்கு நீங்க அனுப்பி வச்சதே உங்க பேராசை தானே, எல்லா தப்புமே உங்க மேல தான் இருக்கு என சொல்ல, ஆமாம், நான் தான் தப்பு பண்ணேன், திரும்ப கூப்பிட்டப்ப வந்தாளா என நியாயம் பேசுகிறார். இதனால் கடுப்பாகும் நந்தினி, ஜனனி அப்பாவை வெளுத்து வாங்குகிறார். 

தொடர்ந்து இவ எல்லா விஷயத்துலேயும் தோத்துட்டா என அப்பா சொல்ல, நான் எந்த விஷயத்துலேயும் தோற்க மாட்டேன். இவ்வளவு நாள் எனக்காக எல்லாம் பண்றீங்க என நினைச்சேன், அனால் நீங்க விட்டதை பிடிக்கணும்ன்னு தான் இப்படி பண்ணீங்கன்னு இப்பதான் புரியுது. அம்மா உங்களுக்காக என்னல்லாம் விட்டுக் கொடுத்திருக்காங்க தெரியுமா என ஜனனி கண் கலங்கி பேசுகிறார். மேலும் தான் விரைவில் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க போகிறேன். இனிமேல் என் வாழ்க்கையில் தோல்வியே கிடையாது. நான் ஜெயிக்கப் போறேன் என சவால் விடுகிறார். நீ ஜெயிச்சிட்டா நான் உன் காலில் விழுறேன், ஆனால் அதுவரை நீ என் பொண்ணு கிடையாது என சொல்லி விட்டு ஜனனி அப்பா செல்கிறார். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி ஜனனியை பாராட்டி நீ கண்டிப்பா ஜெயிப்ப என சொல்லும் காட்சிகளோடு நேற்றைய எபிசோடு நிறைவடைந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
ABP Premium

வீடியோ

பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்
வீடியோ எடுத்த பெண் மீது CASE! முந்தைய இரவு நடந்தது என்ன? தீபக்கின் நண்பர் பகீர்!
PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explain: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Embed widget