Serial Time Change: அச்சச்சோ.. 2 முக்கியமான சீரியல்களுக்கு டைம் மாற்றிய சன் டிவி.. அப்செட்டான ரசிகர்கள்..
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 2 சீரியல்களின் நேரங்கள் திடீரென்று மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 2 சீரியல்களின் நேரங்கள் திடீரென்று மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் உள்ளனர். தற்போதைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு சீரியலும் ஒரே மாதிரியான கதையை கையில் எடுத்தாலும், திரைக்கதையால் தங்கள் பக்கம் ஈர்க்கின்றனர். அதில் சன் டிவியின் சீரியல்களுக்கு என்றும் தனியிடம் உண்டு. தனியார் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே சன் டிவி சீரியல்கள் குறிப்பிட்ட ஆடியன்ஸ் உண்டு.
பல சீரியல்கள் ஆண்டுகள் பல கடந்தும் மறக்க முடியாத அளவுக்கு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி உள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் தங்களை அடித்துக் கொள்ளவே முடியாது என்னும் அளவுக்கு பல ஹிட் சீரியல்களை கொண்டுள்ளது. காலை 9 மணியில் இருந்து மதியம் 3 மணி வரையும், மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரையும் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் பல சீரியல்கள் விரைவில் புதிதாக ஒளிபரப்பாக உள்ளது.
இப்படியான நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 2 சீரியல்களின் நேரங்கள் திடீரென்று மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இவை காலை நேரத்தில் மறுஒளிபரப்பாகும் சீரியல்கள் ஆகும்.
நேரம் மாற்றப்பட்ட சீரியல்கள்
- கண்ணான கண்ணே
பாடகி சித்ராவின் குரலில் ஒலிக்கும் பாடலுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி வரை ஒளிபரப்பானது ‘கண்ணான கண்ணே. இந்த சீரியலில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன், ராகுல் ரவி மற்றும் பப்லூ பிரித்விராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இது தெலுங்கில் ஒளிபரப்பான பௌர்ணமி சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். கிட்டதட்ட 700 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பான கண்ணான கண்ணே ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக உள்ளது. தற்போது இந்த சீரியல் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதுவரை காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இனி காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மிஸ்டர். மனைவி
தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் ‘மிஸ்டர். மனைவி கடந்த மார்ச் 6 ஆம் தேதி தொடங்கியது. இந்த சீரியலில் ஷபானா ஷாஜகான், பவன் ரவீந்திரன், அனுராதா, லதா சபா, மான்சி ஜோஷி, ராஜ்காந்த், அம்மு ரவிச்சந்திரன் என பலரும் நடித்து வருகின்றனர். சுலைமான் இந்த தொடரை இயக்கி வருகிறார். இந்த சீரியல் இனி காலை 9 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் மாற்றம் வரும் ஜூலை 10 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.