Siragadikka Aasai Serial: முத்துவால் அவமானப்பட்ட மீனா... விஜயா செய்த செயல்- சிறகடிக்க ஆசையில் இன்று!
Siragadikka Aasai Today Episode Written Update May 7: சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Siragadikka Aasai Written Update:சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
”நான் குடிக்கல நீயே வேணா என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட கேளு” என சொல்லி முத்து கால் பண்ண மொபைல் எடுக்கின்றார். அதற்கு மீனா, ”உங்க கூட சேர்ந்து குடிச்சவங்க, நீங்க குடிச்சிங்கனு சொல்லவா போறாங்க” என்று கேட்கிறார். முத்து தன் நண்பர்களிடம் நடந்ததை கூறி, ”நீங்களாவது என்னை நம்புறிங்களாடா” என்று கேட்கிறார். ”எங்க அப்பா என்னை அடிக்க கை எல்லாம் ஓங்கினாருடா” என்று முத்து அழுது கொண்டே செல்கிறார்.
”இந்த மாதிரி ட்ரங்க் அண்ட் ட்ரைவ்ல பிடிக்கும் போது குடிச்சி இருக்காங்களானு பார்க்க ஊத சொல்லுவாங்களே அந்த மாதிரி எதுவும் சொல்லலயா” என்ன முத்துவின் நண்பர் செல்வம் கேட்கிறார். அதற்கு முத்து இல்லை என்று பதில் சொல்கிறார். பின் ”சரி ஃப்ரீயா விடு முதல்ல ஸ்டேஷனுக்கு போய் வண்டி எடுக்குற வழிய பாரு” என முத்துவின் நண்பர் சொல்கிறார்.
மீனா தனது ஸ்கூட்டியில் பூவை விற்பதற்காக கொண்டு செல்கிறார். அப்போது சிட்டி அங்கு வந்து ”என்னக்கா இந்த பக்கம் ஓ பூ விற்க வந்திங்களா” என்று கேட்கிறார். ”என்ன பிரச்சனை பண்றியா?” என மீனா கேட்கிறார். அதற்கு சிட்டி ”நான் ஏங்கா உன்கிட்ட பிரச்சனை பன்ன போறேன் சும்மா ஆறுதல் சொல்லலாம்னு வந்தேன். உங்க வீட்டுக்காரு ட்ரெண்டிங்ல இருக்காராமே. டிவி நியூஸ்லலாம் வந்தாராமே” என்று சிட்டி கேட்கிறார்.
மீனா போகும் இடமெல்லாம் ”முத்து இப்டி பண்ணுவாருனு நாங்க நெனைக்கவே இல்லை மீனா” என்று சொல்கின்றனர். ஒரு மருந்தை மீனாவிடம் கொடுத்து, இதை அவருக்கு கொடுத்தா , இனி அவருக்கு குடிக்கனும்ன்ற எண்ணமே வராது என்று சொல்லி கொடுக்கின்றனர். மீனா ஆரஞ்சு ஜூஸ் போட்டு அதில் அந்த மருந்தை கலந்து வைக்கின்றார். அதற்குள் விஜயா வந்து அந்த ஜூஸை எடுத்து குடித்து விடுகிறார். மீனா அதில் மருந்து கலந்து வைத்திருக்கின்றேன் என்று சொல்ல வருகிறார். ஆனால் விஜயா அதை காது கொடுத்து கேட்கவே இல்லை.
மீனாவை வழியில் பார்க்கும் செல்வம் , முத்து குடிக்கவில்லை என்ற உண்மையை சொல்கின்றார். இதை கேட்டு மீனா வருத்தப்படுகின்றார். பின் விஜயாவுக்கு வயிறு சரியில்லாமல் ஆகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகின்றது.