மேலும் அறிய
Advertisement
Siragadikka Aasai : வீட்டை பிரிக்க ஸ்ருதியின் அம்மாவின் போட்ட புது பிளான்.. சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் இன்று என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
'சிறகடிக்க ஆசை' இன்றைய (மே 27) எபிசோடில் மனோஜ் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளாமல் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என மாறி மாறி படுத்து கொள்கிறான். அவனை விஜயாவும் குழந்தையை கொஞ்சுவது போல கொஞ்சி கொஞ்சி எழுப்புகிறாள்.
அதை பார்த்து அனைவரும் கிண்டல் செய்ய ரோகிணிக்கு கோபமாக வருகிறது. முத்து தண்ணியை கொண்டு வந்து மனோஜ் மூஞ்சியில் ஊத்தி எழுப்பிவிடுகிறான். "அப்பாவுக்கு கொடுக்க வேண்டிய 27 லட்சத்தை கொடுத்துட்டு எவ்வளவு நேரம் வேணும்னா தூங்கட்டும்" என முத்து சொன்னதை கேட்டு ரோகிணிக்கு ஆத்திரம் வருகிறது.
மனோஜூக்கு இதை செய் ரோகிணிக்கு அதை செய் என விஜயா மீனாவுக்கு ஆர்டர் போட "எல்லாருக்காகவும் ஏதாவது வேணும்னா சொல்லுங்க செஞ்சு தரேன் ஆனா அவருக்காக எல்லாம் எதுவும் தனியா செய்து கொடுக்க முடியாது" என மீனா விஜயாவிடம் சொல்லிவிடுகிறாள்.
ஆத்திரத்தில் விஜயா மீனாவை கேவலமாக பேசுகிறாள். "நைட் ரூம்ல படுக்க விடலைன்னு தான் நீ இப்படி எல்லாம் பண்ணற" என வாய் கூசாமல் அசிங்கப்படுத்துகிறாள். "ரோகிணியை சமைச்சு குடுக்க சொல்லுங்க இல்லனா நீங்களே சமைச்சு குடுங்க" என முத்து சொல்லிவிட்டு வெளிய அழுதுகொண்டே வந்து விடுகிறாள்.
ஸ்ருதியின் அம்மா, அண்ணாமலை வீட்டுக்கு ஏசி அனுப்பி வைக்கிறாள். அதை "வாங்கி கொள்ள முடியாது என யார் அனுப்புனாங்களோ அவங்க வீட்டுக்கே திருப்பி கொண்டு போய் குடு என சொல்லிவிடுகிறான்" முத்து .
ஸ்ருதி அம்மாவுக்கு போன் செய்து "எங்க வீட்டுக்கு நீங்க எதுக்கு ஏசி வாங்கி குடுக்கணும். உங்க பொண்ணுக்கு தேவையானதை வாங்கி குடுங்க. எங்க வீட்டுக்கு எல்லாம் நீங்க எதுவும் செய்ய வேண்டாம்" என சொல்லி திருப்பி அனுப்பிவிடுகிறான்.
ஆத்திரத்தில் இருந்த ஸ்ருதியின் அம்மாவுக்கு ஸ்ருதியின் அப்பா ஐடியா கொடுக்கிறார். ஏசியை கொண்டு போய் மனோஜ் கடையிலே திருப்பி கொடுத்துடு. "அண்ணன் தம்பிக்கு இடையில் பிரச்சினை வரும். அத வைச்சு ஸ்ருதியும் ரவியையும் வெளியில் வர வைத்து விடலாம்" என ஐடியா கொடுக்கிறார். அதே போல ஸ்ருதியின் அம்மாவும் ஏசியை கொண்டு போய் மனோஜ் கடையில் திருப்பிக்கொடுக்கிறாள்.
முத்து அவளை அசிங்கப்படுத்தியதாக சொல்லி மனோஜையும் ரோகிணியையும் ஏத்தி விடுகிறாள். இவர்கள் பேசி கொண்டு இருந்ததை பார்த்த கஸ்டமர் ஒருவர் "புது கடைன்னு சொன்னீங்க ஆனா பொருள் ரிட்டர்ன் ஆகுதே. நான் அப்புறம் வந்து வாங்கிக்குறேன்" என சொல்லி வாங்காமலே போய் விடுகிறார்.
"என்னால உங்க பிசினஸ் கெட்டு போயிடும் போல" என சொல்லி ஸ்ருதியின் அம்மா "இந்த ஏசியை நான் உங்க கடைக்கு கிஃப்ட் கொடுத்ததா இருக்கட்டும். பணம் எல்லாம் திருப்பி தர வேண்டாம்" என சொன்னதும் ரோகிணி ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க என சொல்லி பணத்தை கொண்டு வந்து கொடுக்கிறாள். ஸ்ருதியின் அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் "பொருளை திருப்பி கொடுத்ததற்கு அப்புறம் பணத்தை திருப்பி கொடுக்கலைன்னா நல்லா இருக்காது" என சொல்லி பணத்தை ஸ்ருதியின் அம்மாவிடம் கொடுத்து விடுகிறாள்.
"முத்துவை தவிர அந்த வீட்ல எல்லாரும் நல்லவங்களா இருக்கீங்க" என மீண்டும் மனோஜ் ரோகிணியை ஏத்தி விடுகிறாள் ஸ்ருதி அம்மா. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) எபிசோடுக்கான கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion