மேலும் அறிய

Siragadikka Aasai : கவரிங் நகையை கொடுத்து ஏமாற்றும் விஜயா.. சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka Aasai Today :மீனாவின் நகையை மனோஜுக்கு கொடுத்த சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜயா. போலி நகையை மீனாவிடம் கொடுத்த விஜயாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.

விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் நகையை விற்ற சேட்டிடம் போன் செய்து அந்த நகையை நான் திரும்பவும் வாங்கிக்கொள்கிறேன் என சொல்கிறான். 

"சேட்டு : அந்த நகைகளை உருகிவிட்டோம். அடகு வைத்தால் நகைகள் இருக்கும். ஆனால் அதையே விற்றுவிட்டால் உடனே உருகி விடுவோம்" என சொல்கிறார். 

அதை கேட்டு மனோஜ் அதிர்ச்சி அடைகிறான். விஜயாவிடம் இந்த விஷயத்தை சொன்னதும் அவள் டென்ஷனாகி மனோஜை அடிஅடி என அடிக்கிறாள். 

"மனோஜ் : இப்படி பண்ணுவாங்கனு எனக்கு எப்படி தெரியும்?

விஜயா : என்ன தான் உனக்கு தெரியும். இந்த விஷயம் வீட்டுக்கு தெரிஞ்சா என்னோட மானமே போயிடும். அந்த நகையை நான் பார்த்தது கூட கிடையாது. இல்லாட்டி நான் அதே மாதிரி வாங்கியாவது வைச்சுடுவேன்" என்கிறாள்.

Siragadikka Aasai : கவரிங் நகையை கொடுத்து ஏமாற்றும் விஜயா.. சிறகடிக்க ஆசையில் இன்று

உடனே மனோஜுக்கு போனில் நகைகளை போட்டோ எடுத்து வைத்தது ஞாபகம் வருகிறது. அதை அவன் சொன்னதும் அதே போல கவரிங் நகைகளை வாங்கி வைக்க விஜயா பிளான் போடுகிறாள். அதை கேட்டு பார்வதிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. 

வீட்டில் அண்ணாமலை, முத்து, ஸ்ருதி மற்றும் ரோகினி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் அப்போது முத்து சாப்பாட்டில் இருந்து முடி ஒன்றை எடுத்து இது யார் முடியாக இருக்கும் என ஆராய்ச்சி செய்கிறான். அண்ணாமலை முத்துவை திட்டி சாப்பிட சொல்கிறார். 

மீனா : அது என்னோட முடியா தாங்க இருக்கும். தெரியாம விழுந்து இருக்கும். சாப்பாட்டுல முடி இருந்தா உறவு நீடிக்கும் அப்படினு சொல்லுவாங்க" என மீனா சொன்னதும் அண்ணாமலையும் ஆமா எங்க அம்மா கூட அப்படி தான் சொல்லுவாங்க என சொல்கிறார்.  

முத்து : ஆனா எனக்கு வேற மாதிரி சொல்லி இருக்காங்களே. சாப்பாட்டுல முடி இருந்தா வீட்டுக்கு ஏதோ பிரச்சினை வரும் என சொல்லி இருக்காங்களே என சொன்னதும் அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அந்த நேரத்தில் விஜயாவும் மனோஜும் வீட்டுக்கு வருகிறார்கள். விஜயாவிடம் மீனா கொடுத்த நகைகளை திருப்பி தர சொல்லி கேட்கிறார் அண்ணாமலை.

விஜயா : ஏதோ வீர வசனம் எல்லா பேசுனா? சபதம் எல்லாம் போட்ட. இவளுக்காவது கொஞ்ச ரோஷம் இருக்கும் என நினைச்சேன்.
ரோகிணியும் விஜயாவுடன் சேர்ந்து ஜால்ரா அடிக்கிறாள். மீனாவை அவமானப்படுத்துவது போல பேசுகிறாள். அதை கேட்டு மீனாவுக்கும் முத்துவுக்கும் ஆத்திரம் வருகிறது. 

அண்ணாமலை : மீனாவுக்கு எங்க அம்மா கொடுத்த நகைகளை தான் கேக்குறாங்க. உனக்கு என்ன வந்தது? கேட்டா கொடுக்க வேண்டியது தானே?

விஜயா :எதுக்காக கேக்குறாங்க? 

Siragadikka Aasai : கவரிங் நகையை கொடுத்து ஏமாற்றும் விஜயா.. சிறகடிக்க ஆசையில் இன்று

அண்ணாமலை : நீ எடுத்து கொடுக்குறீயா இல்ல நான் எடுத்து வந்து கொடுக்கட்டுமா?என்கிறார். 

விஜயா : இவளோட நகை எனக்கு எதுக்கு? நானே எடுத்துட்டு வரேன் என கொண்டு வந்து கொடுக்கிறாள்.

மீனாவும் முத்துவும் அதை வாங்கிக்கொண்டு வெளியே கிளம்புகிறார்கள். எங்கே போகிறார்கள் என தெரியாமல் விஜயா படபடப்பாக இருக்கிறாள். 

மீனாவும் முத்துவும்  தெரிந்த நகை கடைக்கு ஒன்றுக்கு போகிறார்கள். அங்கே சென்று பாட்டி பிறந்தநாளுக்கு செயின் ஒன்று பரிசாக கொடுக்க பார்க்கிறார்கள். மீனாவிடம் இருந்த நகையை கொடுத்துவிட்டு புது நகையாக எடுக்கலாம் என பழைய நகையை கொடுத்ததும் அது போலியான நகை என்பதை கடைக்காரர் கண்டுபிடித்து விடுகிறார். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
Embed widget