மேலும் அறிய
Advertisement
Siragadikka Aasai August 27: ரோகிணியை ரைட் லெஃப்ட் வாங்கிய விஜயா... இரண்டாவது கர்ப்பம் பற்றிய சீக்ரெட் உடைந்தது... பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை
Siragadikka Aasai Today :வீட்டில் உள்ள அனைவருக்கும் ரோகிணியின் இரண்டாவது கர்ப்பம் பற்றிய தெரியவர அதை எப்படி ரோகிணி சமாளிக்கிறாள்.
Siragadikka Aasai serial August 27 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 27) எபிசோட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். ரோகினி பற்றிய விஷயத்தை மீனா ஸ்ருதியிடம் சொல்ல, ஸ்ருதி அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.
ஸ்ருதி : "ஏற்கனவே குழந்தை பற்றி பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ரோகிணி பேசும் போதே எனக்கு சந்தேகமாக இருந்தது. இப்ப ரோகிணிக்கு இரண்டாவது குழந்தைகாக செக்கப் பண்ண போயிருக்காங்கன்னு சொல்லும்போது ரொம்ப அதிர்ச்சியா இருக்கிறது" என ஸ்ருதி மீனாவிடம் சொல்கிறாள்.
ஸ்ருதி : "இதை நாம ரோகிணியிடமே கேட்டு விடலாம் வாங்க" என ஸ்ருதி கிளம்ப மீனா அவளை தடுத்து நிறுத்தி யாரிடமும் சொல்ல வேண்டாம் என ஸ்ருதியிடம் சொல்லி விடுகிறாள் மீனா.
ஆனால் இந்த ஷாக்கில் இருந்து மீள முடியாத ஸ்ருதி ரவியிடம் உண்மையை உடைத்து விடுகிறாள். முதலில் நம்பாத ரவி மீனா சொன்னதாகக் சொன்னதும் நம்புகிறான். அதிர்ச்சியில் என்ன செய்வது என புரியாமல் முத்துவிடம் உளறிவிடுகிறான் ரவி.
முத்து : பார்லர் அம்மா கேடி எனக்கு தெரியும். ஆனா இவ்ளோ பெரிய விஷயம் இருக்கும்னு நான் நினைக்கல. இப்படி கூட நடக்க வாய்ப்பு இருக்கா? ஆச்சரியமா இருக்கே எனக் குழம்பிப்போக அண்ணாமலையிடம் உளறிவிடுகிறான்.
முதலில் நம்பாத அண்ணாமலை. ஒருவேளை இதற்கும் விஜயாவுக்கும் கூட ஏதாவது சம்பந்தம் இருக்கலாம். நான் முதலில் அவளிடம் கேட்கிறேன் என சொல்கிறார்.
ரோகிணி விஷயம் பற்றி சொன்னதும் விஜயாவுக்கு பெரிய ஷாக்காக இருக்கிறது.
விஜயா: அவங்களுக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் தான் ஆகுது. அதுக்குள்ள எப்படி இது நடந்திருக்கும் எனக்கு தெரியலையே. வாங்க நம்ம உடனே போய் ரோகிணியிடம் கேக்கலாம் என ஆவேசமாக ரோகிணி ரூமுக்கு சென்று கதவை தட்டி அவளை வெளியே வர வைக்கிறாள் விஜயா. சத்தம் கேட்டு அனைவரும் . வெளியே வந்து பார்க்கிறார்கள்.
விஜயா : உண்மையை சொல்லு ரோகிணி முதல் தடவை நீ எப்போ கருத்தரிச்ச?
ரோகிணி : எதை பத்தி கேக்குறீங்க ஆண்ட்டி. எனக்கு எதுவும் புரியல.
விஜயாவிடம் இருந்து இந்த கேள்வியை எதிர்பார்க்காத ரோகிணி அதிர்ச்சியில் திரு திருவென முழிக்கிறாள். அவள் என்ன பதில் சொல்ல போகிறாள் என தெரியாமல் மீனா குழப்பத்தில் நிற்கிறாள்.
ரோகிணி தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்கவும். அதை பார்த்து மனோஜ் அவளை சமாதானம் செய்கிறான்..
"விஜயா : இரண்டாவது கர்ப்பம் பற்றி செக் பண்ணுவதற்காக ஹாஸ்பிடல்க்கு போனியாமே. எதற்காக போன உண்மையை சொல்லு உண்மைய மட்டும் தான் சொல்லணும். கல்யாணத்துக்கு முன்னாடியா இல்ல கல்யாணத்துக்கு அப்புறமா.
ரோகிணி: என்ன ஆண்ட்டி இப்படியெல்லாம் கேக்குறீங்க. எல்லாருக்கும் முன்னாடியும் வச்சு. மனோஜோட குழந்தை தான் ஆண்ட்டி. பண்ணிட்டு சொல்லலாம்னு நெனச்சேன். அதுக்குள்ள அப்பா ஜெயில்ல இருக்க விஷயத்த வந்து மாமா சொன்னதும் அத பத்தியே நினைச்சு நினைச்சு டென்ஷன்ல எனக்கு அபார்ஷன் ஆயிருச்சு. மனோஜ்க்கு கூட இது பத்தி தெரியாது " என கதை விடுகிறாள் ரோகிணி அதைக் கேட்டு ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எப்பிசோட் முடிவுக்கு வந்தது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion