Siragadikka Aasai serial Aug 10 : ரோகிணி மேல விஜயாவுக்கு சந்தேகம் வந்துருச்சு.. சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai Today :ரோகிணி விஜயாவை திருப்பி கேள்விகேட்டு மடக்கினாலும் ரோகிணி மேல லைட்டா சந்தேகம் வந்துவிட்டது. ரவி சொன்ன குட் நியூஸ். இன்றைய சிறகடிக்க ஆசையில்.
Siragadikka Aasai serial August 10 : 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா ரோகிணியிடம் போய் " நீ எப்படி மனோஜை பார்த்து இப்படி கேள்வி கேட்கலாம். நீ கூட தான் கல்யாணத்துக்கு முன்னாடி வெளிநாட்டுல இருந்த. உனக்கு குழந்தை உண்டாச்சா அப்படின்னு நாங்க கேள்வி கேட்டா உனக்கு எப்படி இருக்கும்" என விஜயா ரோகிணியிடம் அதட்டி கேட்க அவள் டென்ஷனாகி விடுகிறாள். இவர்களை இப்படி யோசிக்காவிட்டால் அது சரியாக வராது என மனதுக்குள்ளேயே யோசிக்கிறாள் ரோகிணி.
ரோகிணி: மனோஜ் ஜீவா கூட லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மைதானே. அதை தானே நான் சொன்னேன்.
விஜயா : ஆமா அது உண்மைதான் ஆனா அளவோட தான் பழக்கம் வைச்சு இருந்தான். தப்பெல்லாம் எதுவும் பண்ணல.
ரோகிணி : இல்லனா இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே" என திருப்பி கேட்க விஜயா முகமே மாறிவிடுகிறது.
"விஜயா: சரிம்மா இது மாதிரி எல்லாம் இனிமேல் பேசாத" என சொல்லிவிட்டு சைலண்டாக வெளியில் வந்து விடுகிறாள் விஜயா.
விஜயா : "ரோகிணி ஏன் திடீரென இப்படி எல்லாம் கேள்வி கேட்குறா. கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் ரோகிணியை எனக்கு தெரியும். அதுக்கு முன்னாடி அவளை பத்தி நமக்கு எந்த விஷயமும் தெரியாது. நீ எல்லாத்தையும் சொல்லிட்ட. ஆனா அவ எதையுமே சொல்லலையே. பொறுமையா அவ கிட்ட கேட்டு பாரு" என்கிறாள்.
முத்து கட்டைகளுடன் வீட்டுக்கு வருகிறான். அதை பார்த்து அண்ணாமலை என்ன இது என கேட்கிறார்.
"முத்து : அப்பா என்னுடைய ப்ரெண்ட் வெளியூருக்கு போவதால் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் வித்துவிட்டு போகிறான். அதனால் என்னை இந்த கட்டிலை எடுத்துக்க சொல்லி சொன்னான். மேல ரூம் கட்டினதும் இதை அங்க போட்டுக்கலாம் இல்ல அது தான் எடுத்துட்டு வந்துட்டேன்" என்கிறான்.
ஹாலில் போட சொன்னதை பார்த்து விஜயாவும் ரோகிணியும் கேலி கிண்டல் செய்கிறார்கள். அதை எதையும் பொருட்படுத்தாமல் கட்டிலை போட சொல்கிறான் முத்து.
"மீனா : ரூம் கட்டினதுக்கு அப்புறம் பொருள் எல்லாம் வாங்கலாம் இல்ல. பாருங்க எல்லாரும் கிண்ட பன்றாங்க.
முத்து : அது பத்தி எல்லாம் கவலை படாத மீனா. அவங்க கிண்டல் பண்ணட்டும். அப்போ தான் நாம சீக்கிரமா கட்டணும் என்ற என்ன வரும் " என்கிறான்.
ஸ்ருதி வந்து புது கட்டிலை பார்த்து ஆஹா ஓஹோ என பாராட்டுகிறாள். அது பொறுக்காமல் மனோஜ் கேவலப்படுத்தி பேச ஸ்ருதி முத்து மீனாவுக்கு சப்போர்ட் செய்கிறாள்.
ரவி அவனுடைய ரெஸ்டாரெண்டில் ஜோடிகளுக்கான ஒரு போட்டி நடத்துவது பற்றி சொல்லி பார்ம் கொடுக்கிறான். "ஜோடிகளுக்கான போட்டி என வச்சா அதில் நாங்க இரண்டு பெரும் தான் ஜெயிப்போம். நாங்க தான் சிறந்த ஜோடி" என திமிராக பேசுகிறான் மனோஜ்.
"என்ன கேள்வி கேக்குறாங்கனு புரியாதவங்க எல்லாம் போட்டியில கலந்துக்கிட்டு என்ன பண்ண போறாங்க?" என மீனா முத்துவை அவமானப்படுத்துகிறார்கள் விஜயா, ரோகிணி மற்றும் மனோஜ்.
முதலில் இதெல்லாம் நமக்கு சரியா வராது என சொன்ன முத்து பின்னர் ஒரு லட்சம் பரிசு என சொன்னதும் சரி என்கிறான் முத்து. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.