Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை...! இந்தியில் ரீமேக் செய்யப்படும் தமிழ் சீரியல்! வெளியான மாஸ் அப்டேட்
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்தியில் ரீமேக்காக உள்ள நிலையில் இதற்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.
சீரியல்களுக்குக்கு எப்போதும் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருந்த போதிலும் அனைத்து சீரியல்களும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. ஒரு சில சீரியல்களுக்கே மகுடம் சூட்டுகின்றனர் ரசிகர்கள். சிறகடிக்க ஆசை சீரியல் 6 மாதத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இந்த சீரியலிலும் மாமியார் கொடுமை உள்ளது. இருந்தபோதிலும், சதி திட்டம் தீட்டுவது போன்ற ஓவர் ட்ராமடிக் இல்லாமல் அது இயல்பாகவே காட்டப்படுகின்றது. மேலும் இந்த கதையில் வரும் நாயகன் முத்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சீரியலில் வரும் இடம் பெரும் ஒவ்வொரு கதாப்பாத்திங்களும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளர். சீரியலின் கதைக்களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து வருகிறது. டி.ஆர்.பியிலும் இந்த சீரியல் முதல் 7 இடங்களுக்குள் இடம் பிடித்து விடுகிறது.
வழக்கமான டாக்சிக் ஸ்டோரியாக இல்லாமல் இது சற்று வித்யாசமாக இருப்பதால் தான் இந்த சீரியல் இவ்வளவு ரீச் பெற்றுள்ளது. சீரியலில் அவ்வப்போது புது கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்வது கதைக்கு கூடுதல் பலமாக அமைந்து விடுகிறது. சீரியல்களில் வழக்கமாக இருக்கும் சோகமும், அழுகையும் இந்த சீரியலை அதிகமாக ஆக்கிரமிக்கவில்லை. கதாப்பாத்திரங்களின் நடிப்பும் கதைக்களமும் சலிப்புத்தட்டவில்லை. இந்த காரணிகள் தான் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
தமிழில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியல் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதற்கான ப்ரமோவும் வெளியாகி உள்ளது. வழக்கமாக சீரியல்கள் என்றாலே இந்தியில் இருந்து தான் தமிழில் டப் செய்யப்படும். ராஜா ராணி 2, திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்கள் இந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது முதன்முறையாக தமிழில் இருந்து ஒரு சீரியல் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. வட இந்திய மக்கள் மத்தியிலும் இந்த சீரியல் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க