Seetha Raman: ஆதாரம் இருக்கு.. செக்மேட் வைத்த அர்ச்சனா.. ஆட்டத்தை கலைத்த மகா.. சீதா ராமன் இன்று!
"நீ அந்த ரவுடி கிட்ட பேசின கால் ரெக்கார்டிங் என்கிட்ட இருக்கு” என அதிர்ச்சி கொடுக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
இதை சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் அர்ச்சனா சித்தி இந்த வீட்ல இருக்க கூடாது என்று சொல்லி என் நிலையில் மகா வேறு வழியின்றி அர்ச்சனாவை வெளியே போக சொன்ன நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது அர்ச்சனா ரூமுக்கு வர மகா இப்போதைக்கு வெளியே போங்க, “அக்கா நாலு நாள்ல உங்களை இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வரேன்” என்று சொல்ல, அர்ச்சனா "நான் எதுக்கு போகணும்? அப்படியெல்லாம் போக முடியாது, நான் இந்த வீட்டை விட்டு போகணும்னா நீயும் என் கூட வெளியே வரணும், நான் போகும் போது நீ பண்ண வேலைகள் எல்லாத்தையும் சொல்லிட்டு தான் போவேன்" என செக்மேட் வைக்கிறார்.
அது மட்டுமின்றி "நீ அந்த ரவுடி கிட்ட பேசின கால் ரெக்கார்டிங் என்கிட்ட இருக்கு” என அதிர்ச்சி கொடுக்கிறார். “நீ என்ன பண்ணுவியோ எப்படி பேசுவியோ எனக்கு தெரியாது, நான் இந்த வீட்ல இருக்கணும், இல்லன்னா உன்னையும் இந்த வீட்ல இருக்க விட மாட்டேன்” என சொல்ல அதிர்ச்சியுடன் மகா வெளியே வருகிறாள்.
பின்னாடியே அர்ச்சனா கண் கலங்கி கொண்டு சூட்கேஸை தூக்கிக்கொண்டு வர, சேது பசங்களையும் கூட கூட்டிட்டு போக போற என்று கேள்வி கேட்க, “என் பிள்ளைகளை நான் எதுக்கு விட்டுட்டு போனோம்” என்று சொல்ல, “சுபாஷ் அண்ணன் தான் சொல்றாரு இல்ல விட்டுட்டு போ” என்று சொல்ல, “அப்ப நீங்க வரலையா?” என அர்ச்சனா கேட்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். நான் இல்லாத வீட்டில் உங்களுக்கு என்ன வேலை என்று சுபாஷை பார்த்து அர்ச்சனா கேள்வி கேட்கிறார்.
உடனே மகா “பசங்கள அனுப்ப முடியாது, அவங்க படிப்பு கெட்டு போயிடும், சுபாஷையும் அனுப்ப முடியாது, ஆபீஸ் வேலை பாதிக்கப்படும்” என சொல்ல, “அப்போ நான் மட்டும் போகணும்னு சொல்றியா” என்று அர்ச்சனா கேள்வி கேட்க மகா பூஜை அறையில் இருந்து தட்டை எடுத்து வந்து கற்பூரம் ஏற்றி “இனிமேல் சீதாவுக்கு எதிரா எந்த தப்பும் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க” என சொல்லி கண்ணை காட்ட அர்ச்சனா சத்தியம் செய்கிறாள்.
“இந்த குடும்பம் பிரிகிறதை என்னால பார்க்க முடியாது, இந்த ஒருமுறை மட்டும் மன்னித்துவிடு ராம். திரும்பவும் இந்த மாதிரி ஏதாவது பிரச்சனை ஆச்சுன்னா நானே அவங்க கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவேன்” என சொல்கிறாள். உடனே வீசிங் வந்தது போலவும் நடிக்க எல்லோரும் பயந்து போகின்றனர்.
அதன் பிறகு ராம் ராஜசேகரிடம் இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்க, அங்கிள் இனிமே சீதாவுக்கு எந்த பிரச்சினையும் வராது” என சொல்ல அவர் “இந்த வீட்டை நம்பி விட்டுட்டு போக முடியாது நான் சீதாவை கூட்டிட்டு போறேன்” என்று சொல்ல ராம் மகா சித்தியால இந்த குடும்பம் பிரிகிறது தாங்க முடியாது இந்த ஒரு முறை மட்டும் எனக்காக விட்டுக்கொடுங்கள் எனக் கெஞ்சுகிறார். இப்படியான நிலையில் சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.