கதிர் - செந்திலுக்கு சாப்பாடு கொடுக்க கூடாது என்று கண்டீஷன் போட்ட பாண்டியன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 519ஆவது எபிசோடில், தங்கமயிலின் வெகுளித்தனம் தான் சுவாரஸ்யமான காட்சியாக அமைந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 519ஆவது எபிசோடானது செந்தில் மற்றும் கதிரின் காட்சிகளுடன் தொடங்குகிறது. இதில் மீனா தனக்காக செய்த உதவிகளை எண்ணி செந்தில் பெருமிதம் கொள்கிறார். மேலும், கார் வாங்க வைத்திருந்த பணத்தை எடுத்து வேலை வாங்க கொடுத்தது தெரிந்து மீனா கோபப்பட்டால். தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று ஒதுங்கிவிட்டாள். ஆனால், எனக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது அவள் தான் முன்னாடி நின்னு உதவி செய்தாள் என்று செந்தில் தனது மனைவி மீனா செய்த உதவிகளை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது கதிர் தன்னிடம் ராஜீ கேட்டதை நினைத்துப் பார்த்தி தனக்கு தானே சிரித்துக் கொண்டார். அதாவது "நீ படித்து முடித்து என்ன செய்ய போற என்று ராஜீ கேட்டது கதிருக்கு நினைவிற்கு வந்தது". அதன் பிறகு மொபைலில் குழந்தை சிரிக்கும் வீடியோ காட்சிகளை பார்த்து தங்கமயில் சிரித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து தங்கமயிலின் அம்மா பாக்கியம் போன் போட்டு பேசினார். அவரிடம் அம்மா நான் சாப்பிடுவதே இல்லை என்று சொன்னார். அதற்கு ஏன், என்று பாக்கியம் கேட்க, நான் சாப்பிட போய் அந்த சாப்பாடு குழந்தையின் தலையில் விழுந்துருச்சுன்னா என்ன பண்ணுறது அதான் நான் இப்போது சரியாக சாப்பிடுவது இல்லை என்று சொன்னார்.
அதற்கு பாக்கியம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள். அதன் பிறகு அதான் நீ 12ஆம் வகுப்போடு முடிச்சிக்கிட்ட. மேற்கொண்டு படிக்கவில்லை. உன்ன பெத்ததுக்கு இப்படியொரு கூமுட்டையாக இருக்கிறாய் என்று எண்ணி தனக்கு தானே வேதனை பட்டுக் கொண்டார். அந்த நேரம் பார்த்து மீனா மற்றும் ராஜீ இருவரும் வந்துவிட்டனர். அவர்கள் இருவரும் தங்கமயில் பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். நீங்கள் சாப்பிட்டால் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது என்று அவருக்கு அறிவுரை கூறுகிறார். அதன் பிறகே தங்க மயிலும் போய் சாப்பிடுகிறார்.
அப்போது செந்தில் மற்றும் கதிர் மட்டும் வீட்டில் இல்லை. அவர்கள் தவிர மற்றவர்கள் சாப்பிட்டனர். மேலும் வீட்டிற்கு வந்த பாண்டியன் செந்தில் மற்றும் கதிர் பற்றி விசாரித்தார். அவர்களை காப்பாற்ற கோமதி நான் தான் பால் வாங்க கடைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் என்றார். ஆனால், கோமதி சொல்வதை பாண்டியன் நம்பவில்லை. அந்த நேரம் பார்த்து அவர்கள் இருவரும் வர பாண்டியன் கொஞ்சம் கோபமாக பேசுகிறார். மேலும், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க கூடாது என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிடுகிறார். அவர் வெளியில் சென்றதை பார்த்த கோமதி தனது மகன்கள் இருவருக்கும் சாப்பாடு பரிமாற அவர்களும் நிம்மதியாக சாப்பிட்டனர்.
ஆனால், அதற்குள்ளாக பாண்டியன் வீட்டிற்கு வந்தார். அவர் கோமதியிடம் ஏன் அவர்களுக்கு சாப்பாடு போட்ட என்று கேட்டு சத்தம் போட்டார். ஆனால் அவரை சமாதானம் செய்து கோமதி மீண்டும் வெளியே அனுப்புகிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.





















