மீனா கொண்டு வந்த ரூ.10 லட்சம் பணம்; கடைசி நேரத்தில் தப்பித்த செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ரூ.10 லட்சம் பணத்திற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் செந்திலை, அவரது மனைவி மீனா காப்பாற்றினாரா? இல்லையா என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்களும் பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி, இந்த வாரமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 10 லட்சம் பணத்திற்காக செந்தில் கஷ்டப்படும் காட்சிகள் தான் இடம்பெற்றன.
தனது கடைசியில் வேலை பார்க்க பிடிக்காமல், மாமனாரின் பேச்சைக் கேட்டு ரூ.10 லட்சம் பணத்தை அரசு வேலை வாங்குவதற்காக செந்தில் கொடுத்துவிட்டார். இது அரசியின் கல்யாணத்திற்காக பாண்டியன் குருவி போல் சிறுக சிறுக சேர்ந்து வைத்த பணம் ஆகும். மேலும், அரசியின் கல்யாணம் நின்ற பிறகு, அந்த பணத்தை பாண்டியன் மீண்டும் வங்கியில் போட சொன்னார். ஆனால், செந்தில் அதனை வங்கியில் போடாமல், அரசு வேலைக்காக கொடுத்துவிட்டார்.

ஆனால் திடீர் என பாண்டியனின் அக்கா, மற்றும் மாமா இருவரும், திருமணத்துக்கு செலவு செய்த ரூ.10 லட்சத்தை திருப்பி கேட்ட நிலையில், பாண்டியன் பேங்கில் உள்ள பணத்தை எடுத்து வந்து அக்காவிடம் கொடுத்து விடு என செந்திலிடம் கூறுகிறார். செந்தில், யார் யாரிடமோ ரூ.10 லட்சம் கிடைக்காதா என்று கேட்டு பார்த்தும் என பலனும் இல்லை. மீனாவோ தனது அலுவலகத்திலும் கேட்டு பார்த்தார். ஆனால் பணம் கிடைத்தபாடில்லை.
வேறு வழியில்லாமல் வெறும் கையோடு வீட்டிக்கு வருகிறார்கள் செந்தில் மற்றும் கதிர். அவர்களுக்கு முன்பே பணத்தை வாங்க பாண்டியனின் அக்காவும், மாமாவும் வந்து காத்திருக்கிறார்கள். செந்திலிடம் பாண்டியன் பணம் எங்கே என கேட்க... அவர் திணறியபடியே அப்பா பணம் இல்லை என சொல்கிறார். பணம் எங்கே போனது என்கிற உண்மையை செந்தில் கூற வரும் நேரத்தில், மீனா உள்ளே வந்து பணம் என்னிடம் இருக்கிறது என்று கூறி ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து பாண்டியனிடம் கொடுத்துவிட்டார். நீ எப்படி என்று கேட்க, எனக்கு பேங்கில் வேலை இருந்தது. அதனால் நான் சென்று எடுத்துக் கொண்டு வந்தேன் என கூறுகிறார்.
ஆனால், மீனாவிற்கு எப்படி ரூ.10 லட்சம் கிடைத்தது என்கிற தகவல்களும் எதுவும் வெளியாகவில்லை. கடன் வாங்கினாரா, லோன் வாங்கினாரா, அல்லது தன்னுடைய அப்பாவிடம் சென்று 10 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு வந்தாரா என்பது பற்றிய விவரங்கள் நாளைய எபிசோடில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















